Header Ads



ஐரோப்பிய யூனியனின் மனித உரிமை விருதுக்கு மலாலா பெயர் பரிந்துரை

ஆண்டுதோறும் மனித உரிமைக்காகப் பாடுபடுவோர்களில் சிறந்தவரைத் தேர்வு செய்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் பரிசளிப்பது வழக்கம். அந்த நாடுகளின் உயரிய விருதாக இது கருதப்படுகின்றது. இந்த விருதினைப் பெற்றவர்களில் பர்மாவைச் சேர்ந்த ஆங் சங் ஸூ கி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அடங்குவர்.

இந்த வருடத்திற்கான மனித உரிமை விருதினைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 7 பேர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வில் இடம் பெற்றவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாயும், அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடென்னும் அடங்குவர். 16 வயதான மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாக்கப்பட்டு உயிர்பிழைத்தவர். பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும் இவர் மூன்று உள்ளூர் தேர்தல் குழுவினரால் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்க அரசு மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் உலகிற்கு தெரிவித்தார். பசுமை சூழல் அமைப்பு ஒன்றினால் இவர் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இவர்கள் ஏழு பேரில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. சகோதரியே.... நீங்கள் வருங்கால ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் 'அவர்களின்' செல்லப்பிள்ளையாகி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. She was shot on the forehead, where is the scar?? When she was taken to hospital soon after the shooting incident, she had a big bandage on the forehead and the news said that the bullet entered through the forehead! According to my Pakistani friends, this was a staged drama! She is only a Pawn in the whole episode!

    ReplyDelete

Powered by Blogger.