தம்புள்ளை அம்மன் கோயில் தாக்கப்பட்டமைக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கண்டனம்
தம்புள்ளை நகரில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் தாக்கப்பட்டு அங்கிருந்த சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வருட கால வரலாற்றைக் கொண்ட குறித்த கோயிலானது பௌத்தர்களின் புனித ப+மியில் அமைந்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக விஷமிகளால் தாக்கப்பட்டமையானது இந்த நாட்டில் கடந்த மூன்று வருட காலமாகத் தொடர்ந்து வரும் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகளின் மற்றொரு பரிமாணமாக அமைந்துள்ளது எனவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில் மீதான தாக்குதலும் சிலை உடைப்பும் இந்த நாட்டில் இன, மத ஒற்றுமையை நேசிக்கின்ற உள்ளங்களை கடும் கவலையடைச் செய்துள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அப் பள்ளிவாசலின் இருப்பு ஊசலாடிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே அதன் அருகில் அமைந்துள்ள இந்துக் கோவில் தாக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக, கடந்த மாதம் 20 ஆம் திகதி அங்கு வருகை தந்த தம்புள்ளை விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் குறித்த கோவிலை அங்கிருந்து அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆலய நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த வருடம் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை தலைமை தாங்கி நடத்திய அதே பௌத்த பிக்குவே காளி கோயிலுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்;துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாக நிரூபணமாகின்றது.
புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள் பௌத்த மத தலங்கள் மாத்திரமே இருக்க முடியும் எனவும் ஏனைய மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்க முடியாது எனவும் குறித்த தேரர் வாதிட்டு வருவதானது நாட்டின் சட்ட வரையறைகளுக்கு முரணானதாகும்.
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பின் இன்று இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
இதுவரை சுமார் 24 பள்ளிவாசல் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதேபோன்று தேவாலயங்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவிடயத்தில் அரசாங்கம் பராமுகமாக செயற்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பதில் பாரபட்சமாக செயற்பட்டதன் வெளிப்பாடாகவே இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாட்டில் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வுப் பிரசாரங்கள் தனக்கு கவலையளிப்பதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களை அரசாங்கம் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
நவநீதம்பிள்ளையின் இந்தக் கூற்றானது இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வுப் பிரசாரங்கள் சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளன என்பதற்கு தெளிவான அத்தாட்சியாகும். இவ்வாறான சம்பவங்களின்போது அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இது தொடர்பில் சர்வதேச நாடுகளின் கண்டனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்வுப் பிரசாங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதொடு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தவும் முன்வரவேண்டும். இல்லாதபட்சத்தில் தொடர்ந்தும் இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவதையும் அதன் மூலமாக நாட்டில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான குரோதங்கள் தோற்றம் பெறுவதையும் தடுத்து நிறுத்த முடியாதுபோய்விடும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

Post a Comment