வாழ்வாதாரத்தை மேம்படுத்த விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,சவூதி அரேபிய நாட்டின் முக்கிய பிரமுகர்கள்,ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.அஹமட் அப்கர்,பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் உட்பட அதிகாரிகள்,பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முதற்கட்டமாக 10விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த அன்பளிப்பு வைபவத்தில் ஏன் சவூதி அரேபிய நாட்டின் முக்கிய பிரமுகர்களும்,மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் ஆலோசகரும் கலந்து கொண்டனர்? ஏனெனில், இவை அவர்களின் நன்கொடையா?அப்படியாயின் ஏன் இதை செய்தியில் அவர்களின் நன்கொடை என எழுதாமல் மறைத்து ஏதோ பெறிதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நன்கொடை வழங்குவது போன்று படங்காட்டுவது?
ReplyDeleteமேக்கப் காரர்கள் சினிமா காரர்கள் மட்டுமல்ல இந்த அரசியல் வாதிகளும்தான் என இதிலிருந்து புலப்படுகிறடு.உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும், உங்கள் அமைச்சினால் அதுமுடியவில்லை என்றால் முடியவில்லை என்பதை சொல்ல வேண்டும் வெற்கப்படக்கூடாது.
எங்களைப்பொறுத்த வரையில், இப்படியான நேரடி முஸ்லிம் வெளினாட்டு உதவிகளில் உள்னாட்டு இன துவேச அரசை எந்த வகையிலும் சம்பந்தப்படுத்தக்கூடாது. அரசியல் வாதிகள் திருந்தினால் உலகமே திருந்தியதற்கு சமம். உலகமே மாசடைந்து நின்மதியற்று கிடப்பதற்கு முறைகேடான தகுதியற்றவர்களினால் நடத்தப்படும் அரசியலே காரணம்.