டுபாய் நீதிமன்றத்தை தகர்க்க போவதாக மிரட்டிய பெண் கைது
துபாய் நீதிமன்றத்தை, வெடிகுண்டை வெடிக்கச் செய்து, தகர்க்கப் போவதாக
மிரட்டிய பெண், கைது செய்யப்பட்டார். முன்னாள் சோவியத் யூனியன் நாடான,
உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று பிற்பகல், துபாய்
நீதிமன்றத்திற்கு, தன், 5 வயது மகனுடன் நுழைந்தார். அங்குள்ள
வழக்கறிஞர்களிடம், "பிரச்னை குறித்துப் பேச வேண்டும்' என, கேட்டுக்
கொண்டவர், திடீரென, தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்
போவதாக மிரட்டினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோர்ட்
ஊழியர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். பல
மணி நேர போராட்டத்திற்குப் பின், அந்தப் பெண்ணிடம் போலீசார் பேச்சு
நடத்தினர். அப்போது, அவர் தன் உடலில் கட்டியிருந்தது, வெற்று வெடிகுண்டு
என்பது தெரிந்தது. தன் குழந்தையை, மகனாக ஏற்க, அவரது கணவர் மறுத்ததால்,
இந்தப் பெண், இது போன்று நாடகமாடி உள்ளார். போலீசார், அந்தப் பெண்ணை, கைது
செய்தனர்.
Post a Comment