இலங்கையில் முதல் முறையாக மாட்டிறைச்சி கடையொன்றை வாங்கிய பௌத்த பிக்கு
(Nw) இலங்கையில் முதல் முறையாக மாட்டிறைச்சி கடையொன்றுக்கான கேள்விப்பத்திரத்தை பௌத்த பிக்கு ஒருவர் கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றி கொள்வனவு செய்துள்ளார். காலி தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த வெலிவெ சுஜாத என்ற தேரரே இதனை கொள்வனவு செய்துள்ளார்.
நாகொட பிரதேச சபைக்குட்பட்ட தல்கஸ்வல பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைக்கு 2014 ஆம் ஆண்டுக்கான அனுமதியை வழங்க விலை மனு கோரப்பட்டிருந்தது.
மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபா விலை கோரப்பட்டிருந்தால், அந்த கடையை அதனை கோரியிருந்த பிக்குவுக்கு வழங்கியதாக பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கடையை கொள்வனவு செய்துள்ள பிக்கு, தமது விகாரைக்கு சில மீற்றர் தொலைவில் இருக்கும் இறைச்சி கடையை மூட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வந்தாகவும் எவரும் அதனை பொருட்படுத்தவில்லை என்பதால் தான் அதனை கொள்வனவு செய்ததாகவும் கூறினார்.
Post a Comment