Header Ads



சீனாவில் போலி வெப்சைட் மூலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்

சீனாவில் அரசு அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் பெயரில் போலி வெப்சைட்டுகள் நடத்தி இந்திய ரூ.3.26 கோடி சுருட்டிய 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சீனாவில் ஜிங்வா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

சீனாவில் 4 குழுக்கள் 11 வெப்சைட்டுகளை நடத்தி வந்தன. அவர்கள் தங்களது குழுமத்தில் இருப்பவர்கள் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் என்றும் எம்.பி.க்கள் என்றும் தெரிவித்துக் கொண்டனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள அதிகாரி ஒருவரும் இவர்களுக்கு உதவியுள்ளார். இவர்கள் அதிகாரிகள் என்ற பெயரில் தவறான புகார்களை கொடுப்பது, அதன் மூலம் பொதுமக்களை, பெரிய கம்பெனிகளை மிரட்டுவது, அவர்களிடம் பணம் வசூலிப்பது என ஈடுபட்டு வந்தனர். இதுபோல் ரூ.3.26 கோடி வரை போலி வெப்சைட் மூலம் ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் சிக்கிய ஜாங் வெய் என்பவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், இணையத்தில் தவறான தகவல்களை கொண்டு எதிர்மறையான செய்திகளை வெளியிட்டோம். அதற்கு ஏராளமான வாசகர்கள் கிடைத்தார்கள். அதை வைத்து அவர்களிடம் ஆளும் கட்சி உறுப்பினர் என கூறி, உங்களை பற்றியும் எழுதி விடுவேன் என மிரட்டி பணம் வசூல் செய்தேன்Õ என்று கூறியுள்ளார்.

அவரிடம் இருந்து போலி ஐடி கார்டுகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். அவர் அளித்த தகவலின்படி 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆசிரியர் ஒருவரும் போனில் செய்திகளை தெரிவித்து வந்துள்ளார். இன்ஜினியர் ஒருவர் இணையதளத்தை நிர்வகித்து கொடுத்துள்ளார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.