Header Ads



யாழ் - சுன்னாகம் மின் உப நிலைய திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ஆரம்பித்துவைத்தார்

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

சுன்னாகம் மின் உப நிலையத்தின் ஊடாக யாழ். குடாநாட்டுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 14-09-2013  ஆரம்பித்துவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் சுன்னாகம் மின் உப நிலையத்திலிருந்து 63 மெகாவொட் மின்சாரம் யாழ். குடாநாட்டிற்கு இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றது.

இதன் மூலம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வீடுகளில் வாழும் மக்கள் நன்மை அடைவார்கள் எனவும் குடாநாட்டின் மின்சக்தி தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியும் எனவும்  மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய நிகழ்வில் அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி- டக்ளஸ் தேவனந்த- வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.