Header Ads



விண்வெளியில் இராணுவ பலத்தை காட்ட வேண்டாம் - இலங்கை, ரஷ்ய கூட்டறிக்கை


(Tn) ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மட்ட கூட்டத் தொடரின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ரஷ்யா மற்றும் எல்செல்வடோர் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் பரஸ்பர பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ¤ம் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோசிங் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தைகளின் முடிவில் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விண்வெளியில் ஆயுதங்களை நிலைகொள்ள வைப்பதற்கான முயற் சிகளுக்கு இடமளிக்கலாகாது என்று குறிப்பிட்டுள்ளனர். விண்வெளியின் சமூக, பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் நாடுகள் ஈடுபடுவது நல்லவிடயம். 

இதன் மூலம் அந்நாடுகள் தங்கள் தேசிய பாதுகாப்பிற்கும், உலகின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விண்வெளியில் ஆயுத மோதல்களை மேற்கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தடை செய்யப்பட வேண்டுமென்று இந்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சகல நாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில் விண்வெளியில் எல்லா நாடுகளும் சர்வதேச சட்டத்தை மதித்து செயற்படுத்த வேண்டுமென்றும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறையில் ஏற்றத்தாழ்வுடைய சகல நாடுகளுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார தொடர்பு களை மேலும் விஸ்தரிக்க வேண்டும். இதற்கு ஏற்புடைய வகையில் பரஸ்பர சட்டவாக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் தேயிலைக்கான சுங்க வரி குறைக்கப்பட்டு ள்ளது என்று தெரிவித்த ரஷ்ய அமைச்சர் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அநாவசியமான போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை தமது நாடு எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.