Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள தயார் - சஜித் பிரேமதாச

நீண்டநாட்கள்  பதவியில் இருக்கும் அரசியல் வாதிகள் தமது பதவிகளில் இருந்து விடுபட்டு இளையோருக்கு இடங்களை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டுவான பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் ஆணைக்கு புறம்பாக அரசியல் நடாத்த முடியாது. மக்களின் ஆதரவினை நேர்மையுடன் ஏற்றுக் கொள்கின்றோம். அதேவேளை, காலாவதியான அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களை துறக்க வேண்டும். மாறாக மக்களின் ஆணைக்குக்கு புறம்பான வகையில் அரசியல் நடாத்துவது பொருத்தமற்றது. நாகரீகமடையாத காலம் முதல் மனிதனின் பலம் ஒற்றுமையாக செயற்படுவதாகும். தனிமைபட்டு எந்தவொரு சாதனையையும் படைக்க முடியாது. எனவே மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் அரசியல் நடாத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் ஏகமனதாக தீர்மானித்து தலைமைப் பொறுப்பை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு நகர்த்த பாடுபடத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை எனவும அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயற்படத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn

1 comment:

  1. we expecting u SAJIHT we wnt u as a opposition leader, then only who left the party will return

    ReplyDelete

Powered by Blogger.