பயங்கரவாதத்திற்கு ஆதரவினை வழங்குபவராகவே நவநீதம்பிள்ளையை கணிக்க வேண்டும்

நவநீதம்பிள்ளையின் கணவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக முன்னர் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், நவநீதம்பிள்ளை தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் எளிலனின் பாரியாரை சந்தித்துள்ளார்.
இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு ஆதரவினை வழங்கும் ஒருவராகவே நவநீதம்பிள்ளையை கணிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர தற்போது அமெரிக்காவின் புகழற்ற நிலையில் உள்ள நாடாக திகழும் அதேவேளை, ரஷ்யாவும் சீனாவுமே முன்னணி நாடுகளாக திகழ்கின்றன.
முன்னணியில் உள்ள ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு தமது ஆதரவினை வழங்கி வருவதால் அமெரிக்க சார்பான நவநீதம்பிள்ளையின் செயல்பாடுகள் இலங்கையை பாதிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். sfm
Post a Comment