Header Ads



ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்

ஆப்கன் நாட்டில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இயங்கிவரும் அமெரிக்கப் படைத்தளம் ஒன்றில் இன்று 02-09-2013 காலை ஆப்கானியத் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கி சண்டை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் இதில் நடந்தேறியதால் நேட்டோ படையினருக்கு லாரிகள் மூலம் சப்ளை நடக்கும் பாதை ஒன்றையும் தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோர்க்ஹாம் பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றபோதிலும், நேட்டோ படையினர் யாரும் கொல்லப்படவில்லை என்று தெரிவித்த ராணுவம் காயமடைந்தோர் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. நங்கர்ஹார் மாகாணத்தின் தகவல் அதிகாரியான அஹமது சியா அப்துல்சை இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

நேட்டோ ஹெலிகாப்டர்களும், படைத்தளத்தின் மீது பறந்து கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் முற்றிலும் விலகுவதை அடுத்து, தலிபான்களும் சமீப காலமாக இந்தப் பகுதிகளில் தங்களின் தாக்குதலை தீவிரமாக்கியுள்ளனர் என்பதுவும் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.