Header Ads



சுற்றாடல் உரிமைகளும், சுற்றாடற் சட்டங்களும்

(அப்துல் அஸீஸ் - மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி)

சுற்றுச் சூழல் என்றால் என்ன?

இன்று உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் மாசுபட்டு  மனித இனம் மட்டுமே பெருகி வருகிறது. இதனால் பிற யாவற்றையும் அழிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இத்தகைய ஒரு பேரழிவின் விழிம்பில் இப்போது இருக்கிறோம்.  நாம் நம்மை பாதுகாக்கும் ச10ழலை உறுதிப்படுத்தாது விட்டால் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

சுற்றுச் சூழல் என்பது உலகில் இயற்கையாகக் காணப்படும் எல்லா உயிர்ப் பொருட்கள், உயிரற்ற பொருட்களின் தொகுப்பைக் குறிக்கும்;. எம்மைச் சுற்றியுள்ள ஆறுகள், ஏரிகள், மண், நீர், வளிமண்டலம், நாற்றங்கள், சுவைகள், தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மனித வர்க்கத்தின் சுற்றாடல்களின் பௌதீகவியற் காரணிகள் எனப் பொருளாகும் எனத் தேசிய சுற்றாடல் சட்டம்  வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது.

சுற்றாடல் மாசுபட்டால் ஆரோக்கியத்திற்கான உரிமை பாதிப்படையுமா?
எமக்கு பல்வேறுபட்ட உரிமைகள் சட்டங்களினாலும், சமுகத்தினாலும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வுரிமைகளையெல்லாம் அனுபவிப்பதற்கு உயிர் வாழ வேண்டும்.  வெறுமனே உயிர் வாழ்ந்தால் மட்டும் போதாது. சுகதேகியாக வாழ ஆரோக்கியமான சுற்றாடல் அவசியம். இது ஒரு மனித உரிமையாகவே தோற்றம் பெற்றுள்ளது. ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவளது இனப் பெருக்க உரிமையை பாதுகாக்க முடியும், மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கல்விக்கான உரிமையை பெற்றிடுவர். இவ்வாறு ஆரோக்கியம் என்பது மனித வாழ்வுக்கு மிக முக்கியம்.

நமது சூழமைவுகளைப் பாதுகாப்பது எப்படி?

சூழமைவு என்பது இயற்கையின் ஓர் அலகு. இதில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள எல்லாத் தாவரங்கள் விலங்குகள் யாவும் அங்குள்ள பலவித பௌதிக பொருள்களாக இசைந்து செயலாற்றுகின்றன. ஏதேனும் ஒரு தாவரம், விலங்கு அல்லது உயிரற்ற பொருள் அதிலிருந்து விலக நேரிட்டால் அல்லது  எண்ணிக்கையில் பெருகினால்; அச்சூழமைவு பெரிதும் அழிவுக்குள்ளாகும். 
எனவே கவனமாக சமநிலை எப்போதும் பேணப்பட வேண்டும். இத்தகைய சூழமைவு எல்லாவற்றிலும் மனிதச் செயற்பாடுகளின் குறுக்கீடுகள்; இருப்பதால் மானிடச் சூழமைவாக யாவும் மாறிவிட்டன.

சுற்றுச் சூழலைப் பற்றி அக்கறை கொள்வதன் அவசியம் என்ன?

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும்தான் நம்மை வாழ வைக்கிறது. வாழ்க்கைக்கு நாம் ச10ழலையே நம்பியிருக்கிறோம். ஆனால் உண்மையில் நமது சூழல் பாதுகாப்பாக இருக்கின்றதா? அல்லது வளமுடன் மேம்படப் போகின்றதா? அல்லது அழிவடையும் சாத்தியக் கூறு இருக்கின்றதா? என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாம்; ச10ழலின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக ச10ழலின் மீது அழுத்தமும் பாதிப்பும் இன்னும் ஏற்படப் போகின்றது. இறுதியில் மனித இனமே இங்கு வாழ முடியாத நிலை ஏற்படலாம்.  நமது வாழ்க்கைக்கு ச10ழலையே நாம் நம்பி இருப்பதால் ச10ழலைப் பாதுகாப்பது மனிதப் பிறவியினர் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை.

தேசிய சுற்றாடல் சட்டம் என்றால் என்ன?

1980இல் ஆக்கப்பட்ட இச்சட்டம் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பிலான மிக முக்கியமானதொரு சட்டமாகும். இச்சட்டம் பின்னர் 1988இலும் 2000இலும் திருத்தப்பட்டது. இச்சட்டத்தினால் சுற்றாடல் முகாமைக்கென மத்திய சுற்றாடல் அதிகார சபை தாபிக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு 1988இல் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் சுற்றாடலை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணங்களான சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் மற்றும் சுற்றாடல் தாக்க மதிப்பீடு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுத் தொல்லைக்காக வழக்கு போட முடியுமா?

சுற்றாடலை பாதிக்கும் பல செயல்கள் பொதுத் தொல்லையாக அமைகின்றன. பொதுத் தொல்லைக்கான வழக்கு நடவடிக்கை தொடர்பிலான குற்றவியல் நடபடிக் கோவையிலுள்ள ஏற்பாடுகள் சுற்றாடலைப் பாதுகாக்கும் பயனுள்ள வழிவகைகளாகவுள்ளன.

வீடு கட்டுமானப் பணிகளுக்காக கல், மண் மற்றும் ஏனைய பொருட்களை வீதிகளில் போடுவதால் பாதையில் வாகனங்கள் பயனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் குப்பை போன்றவற்றை ஆறுகலிலும் கடல்களிலும் போடுவதன் மூலம் நீரின் வளம் பாதிப்படைகிறது. சுத்தமாக வீட்டுச் சூழலை வைத்திருக்காததன் காரணமாக டெங்கு மற்றும் அபாய நோய்கள் தோன்ற காரணமாகின்றது. இவை மட்டுமல்லாது பெரும் ஒலிபெருக்கி சத்தம் கூட சுற்றாடலில் வாழ்பவர்களை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இவை அனைத்திற்கும் வழக்குத் தொடர வழியுண்டு.

உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பு பற்றித் தெரியுமா?

சுற்றாடல் வழக்குகளின் நோக்கமும் விளைவும் ஏனைய வழக்குகளிலிருந்து வேறுபடுவதினால் நீதிமன்றங்கள் வழக்கிடு தகைமை தொடர்பில் இளகிய போக்கை சட்டத்தின் வரையறையினுள் பயன்படு;த்தப்படுகின்றன. அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமை தொடர்பான வழக்கீடு தகைமை பற்றிய குறுகிய ஏற்பாடு பரந்ததொன்றாக திருத்தப்பட்டால் அது சுற்றாடலினால் பாதிக்கப்படும் பாமர, ஏழை மக்கள் தொடர்பி;ல் அவர்களி;ல் அக்கறையுள்ளவர்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் வழக்கிட வழிவகுக்கும்.

இலங்கை உயர் நீதிமன்றத்தால் பல வழக்குகளில், உயிர்வாழ்வதற்கான உரிமையென்பது ஆரோக்கியமான சுற்றாடலுக்கான உரிமையும் உள்ளடக்குமெனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எப்பாவெல பொசுபேற் வழக்கும் சுற்றாடலைப் பேணும் கடற்பாட்டை அரசு மீதும் உயர் நீதிமன்றம் வலியுறுத்திக் கூறியுள்ளது. 

மாரிஸ் கே. உடால் என்பவரின் கருத்தின்படி, 'மேலும் மேலும் இயற்கையைச் சுரண்டும் போது, நமது வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. இறுதியில் ஒரே வாய்ப்புதான் மிஞ்சுகிறது – உயிருக்காகப் போராடுதல்' என்ற ஆளமான கருத்தினை அனைவர்களும் மனதிற் கொள்வோமாக.

No comments

Powered by Blogger.