Header Ads



‘நமது உரிமைக்காக இந்தியாவுடன் பேரிட வேண்டும்

பாகிஸ்தானின் லஸ்கர் – இ– தொய்பா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத். தற்போது அங்கு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜமாத் உத்தவா என்ற பெயரில் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தலைவர் ஹபீஸ் முகமது சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ. 70 கோடி பரிசு அறிவித்துள்ளது. இவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்தினான். ராவல்பிண்டியில் தொடங்கிய பேரணிக்கு சயீத் தலைமை தாங்கினார்.

இப்பேரணி தலைநகர் இஸ்லாமாபாத் வரை நடந்தது. பேரணியை தொடங்கி வைத்து சயீத் பேசும் போது, 

‘‘நமது உரிமைக்காக இந்தியாவுடன் பேரிட வேண்டும். ஜம்மு காஷ்மீரில் இந்தியா போர் ஒப்பந்தத்தை மீறி உள்ளது. பாகிஸ்தானில் இந்தியா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் உள்ளனர். இந்தியாவும், அமெரிக்காவும் நம்மீது கோபமாக உள்ளனர். காஷ்மீருக்கு விடுதலை கிடைக்கும் வரை நமது புனித போர் தொடரும். காஷ்மீர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்ய ஒவ்வாருவரும் தயாராக இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட இந்திய கைதி சரப்ஜித்சிங் ஒரு தீவிரவாதி. அவரது உடலுக்கு இந்திய அரசு மரியாதை அளித்துள்ளது. தீவிரவாதியான அவருக்கு எப்படி அரசு மரியாதை கொடுக்க முடியும்

இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

No comments

Powered by Blogger.