Header Ads



யுத்த வெற்றியின் பிரதிபலனை ஆபரணமாக கருதக் கூடாது - அர்ஜூன ரணதுங்க

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த மனநிலையில் தனது ஆட்சியை முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். களுத்துறை நாகொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் சகல விடயங்களிலும் அரசாங்கம் யுத்தத்தையே கருவியாக முன்வைக்கின்றது. அரசாங்கம் வெகுவிரைவில் இந்த யுத்த மனநிலையில் இருந்து தன்னை விடுவித்து கொள்ளவில்லை என்றால் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மையான நிலைமையாக இருக்காது.

யுத்தம் என்பது எமக்கு கிடைத்த மகிழ்ச்சிகரமான அனுபவமல்ல. யுத்த வெற்றியை பெற்ற நாடு என்ற வகையில் நாம் பாராட்ட வேண்டும். ஆனால்

போரின் பிரதிபலன்கள் நாம் மகிழ்ச்சியாக கொண்டாடும் விடயங்கள் அல்ல. விகாரைகள், கோயில்கள் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் என எங்கு சென்றாலும் அமைச்சர்களும் ஜனாதிபதியும் போரின் துயரமான அனுபவங்களையே மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றனர்.

அரச ஊடகங்கள் தற்போது தினமும் போரின் துயரமான அனுபவங்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி மக்களை யுத்த மனநிலையில் வைத்திருக்க முயற்சித்து வருகின்றன.

யுத்த மனநிலையில் சிக்கியுள்ள இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வுகளை வழங்கியது என்பதை நாங்க கண்டோம்.

ரத்துபஸ்வல என்ற பிரதேசத்தில் குடிக்க குடிநீர் கேட்டு வீதியில் இறங்கிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மூன்று அப்பாவிகளை கொலை செய்தது.

கடந்த காலம் முழுவதும் நாடு பூராவும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது போர் முறையிலேயே அந்த போராட்டங்கள் அடக்கப்பட்டன. இது மிகவும் துரதிஷ்டவசமான நிலைமையாகும்.

வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட நாட்டின் உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும் போது ஓய்வுபெற்ற பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்குமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அது மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் இராணுவ முகாம்களில் அரசாங்கம் பல்வேறு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

காய்கறி விற்பனை முதல் சிவில் மக்கள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக இராணுவ அதிகாரிகள் வேட்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

தேர்தல்களில் அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் பிரதான கருப்பொருளாக யுத்தமே எடுத்து கொள்ளப்படுகிறது என்றார்.

2 comments:

  1. Well said! This Governemt doing nothing other than talking of war and indulging racism againist Muslims,christians and Hindus.

    ReplyDelete
  2. இத சொல்லியே இந்த சிங்களவன எமத்துரங்கப,இவேங்களெல்லாம்
    எப்பதான் திருந்துவாங்களா?

    ReplyDelete

Powered by Blogger.