முஸ்லிம்களுக்கு முதல் எதிரி யார் என்பதை விளங்க வேண்டும் - வை.எல்.எஸ்.ஹமீட்
எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்ந்த வட பகுதி முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் உடுத்த உடையுடன் துறத்தி அடிக்கப்பட்ட போது அவர்களுக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் றிஸாட் பதியூதீன் மட்டுமே என்பதை உணர்ந்து இத் தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் மாங்குளம் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார இறுதிக் கூட்டத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,
உரிமைகள் என வாய்கிளிய கத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் வடபதி மக்களின் துயர்களை துடைப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஒன்றும் இல்லை அது போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பும் வடபகுதி மக்களின் மீள் குடியேற்றத்திற்காக புத்தளத்தில் அகதிகளவாக இருந்த மக்களுக்கு 5000யிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க முயற்;சித்த போது சம்மந்தப்பட்ட சகல அரசியல்வாதிகளும் கையொப்பம் இட்டாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதற்கு ஒப்பமிட மறுத்தனர். இதனை எமது மக்கள் மறப்பதற்கு இல்லை.
இதனுடாக முஸ்லிம்களுக்கு முதல் எதிரி யார் என்பதை விளங்க வேண்டும் வாக்குகள் பிரிவதை தடுப்பதற்காகவே நாங்கள் இணைந்து போட்டியிடுகின்றோம். எமது சமூகங்களுக்கு இப்போது இருக்கின்ற சோதனைகளுக்கு மத்தியில் யாரிடம் எமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளாலாம் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் 3000யிரம் மட்மே உள்ளது.
இதற்குள் தனித்தனி வேட்பாளர்களை போட்டு முஸ்லிம் பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்யும் ஒரு மடத்தனத்தை முஸ்லிம் காங்கிரஸ் செய்வதற்கு எத்தனித்துக்கொண்டிருக்கின்றது. இவைகளை முறியடித்து எமக்கான உரிமைகளை பெறுவதற்கான ஆனையை எமது மக்கள் இத் தேர்தலை மிகவும் கட்சிதமாக பயன்பதுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வளப்படுத்தி அதன் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதன் மூலம் தொடர்ந்தும் எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஆனையை எமது கட்சிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
It is very clear the enemy of Muslim Communities in Sri Lankan is dirty Muslim politicians who are boot lickers of regime. Any body have doubt???
ReplyDeleteஎந்த ஹொஸ்பிட்டல்ல இருக்கீங்க .
ReplyDelete