Header Ads



வடமாகாண முஸ்லிம் வாக்காளர்களுக்கு சில யோசனைகள்

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

வடமாகாண முஸ்லிம் வாக்காளர்களே,எதிர் வரும் 21.09.2013 சனிக்கிழமை வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இது எமது நாட்டில் நடைபெறும் முதலாவது வடமாகாணசபைத் தேர்தலாகும்.இதில் எமது வடபுல இருப்பை உறுதி;படுத்தவும்,எமது பலத்தை தக்கவைத்துக் கொள்ளவும் வாக்களிக்க வேண்டியது அளவையியல் கட்டாயமாகும்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாவும்.அட்டைகள் கிடைக்காதோர் தபாலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனவும்.வாக்காளர் அட்டை கிடைக்காதோர் உரிய அடையாள அட்டையுடன் தான் வாக்களிக்க வேண்டிய வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

1.அதிகாலையில் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லுங்கள்

2.வாக்காளர் அட்டை இருப்பின் கொண்டு செல்லுங்கள்

3.அடையாள அட்டை வாக்களிக்க ஒரு முக்கிய ஆவனமாகும் அதனைக் கட்டாயம் கொண்டு செல்லவும்.

4.வாக்களிப்பு  நிலையங்களுக்குள் சிறுவர்களை அழைத்துச்செல்ல வேண்டாம்.

5.சரியாக உங்கள் வாக்களிப்பு நிலையத்தை இனங்கண்டு அங்கே செல்லவும்
6.வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தருடன் கௌரவமாக நடந்து கொள்ளவும்

7.வாக்களிப்பு மன்ற முகவர்களுடன் தேவையற்ற வாதங்களைத் தவிர்த்துக் கொள்ளவும்

8.முதலில் உரிய அரசியல் கட்சியின் சின்னத்திற்கு வாக்களியுங்கள் அதனை அடுத்து அக்கட்சியில் நீங்கள் விரும்பிய மூவருக்கு வாக்களிக்கவும்.

9.உங்களுக்கு 3 மூன்று விருப்பு வாக்கு அளிக்கும் உரிமையுள்ளது.ஆனால் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு மட்டும் மூன்று வாக்கையும் அளித்துவிடாதீர்கள்.இதனால் பயனில்லை.

1 comment:

  1. மேற்கண்ட நல்ல ஆலோசனைகளை சகல முஸ்லிம் மக்களும் பின்பற்றுவதுடன் உங்களது சொந்த வாக்குக்கு மேலதிகமாக எந்தக் காரணத்திற்காகவும் பிறருடைய வாக்குகளை கள்ள வாக்குகளாக அளிக்காதீர்கள்.

    வாக்களிப்பு என்பது இஸ்லாத்தின் பார்வையில் சாட்சியமளித்தல் என்பதாகும். உங்களின் சாட்சியம் உங்களுடையதாகவே இருக்கட்டும். இன்னொருவருக்குரிய சாட்சியத்தை நீங்கள் துஷ்பிரயோகம் செய்து விடாதீர்கள்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.