Header Ads



தேர்தல்களில் வாக்களிக்காதிருந்தால், நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியாமல் போய்விடும் - ரணில்

இந்த முறை தேர்தல்களை யாரும் புறக்கணிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சி வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த முறை தேர்தல்களில் வாக்களிக்காதிருந்தால், நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியாமல் போய்விடும் என்று அவர் எச்சரித்துள்ளார். அரசாங்கம் கடந்த தேர்தல் காலங்களில் முன்வைத்த வாக்குறுதிகள் எவற்றையும் இன்னும் நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குபலத்தை பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாறாக தேர்தலில் வாக்களிக்காதிருப்பது, அரசாங்கத்துக்கு பிராணவாயு வழங்குவதை போன்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.