யாழ்ப்பாண மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம்
யாழ்.மாவட்டத்தின் அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகல பாடசாலைகளுக்கும் பால் வழங்கும் திட்டத்தை மில்கோ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
மகிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலம் வடமாகாணத்தின் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கிளாஸ் பால் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாலைப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் எழுந்தன. இது தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி ஆளுநர் தலைமையில் மாகாண, வலயக் கல்வி அலுவலர்கள், பணிப்பாளர்கள் பால் வழங்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இதில் பிரச்சினைகள் இனங்காணப்பட்டுத் தீர்க்கப்பட்டதுடன் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தின் 5 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும் பால் வழங்குவதற்கு மில்கோ நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை பால் வழங்கும் திட்டம் ஆரம்பமாகும்.
இவ் வேலைத்திட்டம் விரைவில் ஏனைய மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் என வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment