சிரியா மீதான அமெரிக்காவின் அதிரடி :
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
அறபு வசந்தம் என்றாலும் அறபு முஸ்லிம் உலகில் பனிப் போராய் புரையோடிப் போயுள்ள ஷியா சுன்னி மோதல்களாயினும் அவற்றை மேலைத்தேய மேலாதிக்க மற்றும் யூத சியோனிஸ சக்திகளின் நலங்களுக் கேற்ப கையாள்வதும் அதற்கு அறபு மன்னர்களையும் அறபு நாட்டு வளங்களையும் வளைத்துப் போட்டுக் கொள்வதும் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பூகோல கேந்திர முக்கியத்துவம் மிக்க அரசியல் நகர்வுகளாகும்.
ஏற்கனவே இக்வான்களின் தலைமையில் பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த இஸ்லாமிய எழுச்சியை முடக்குவதற்கு தொடர்ந்தேர்ச்சியான சர்வதேச பிராந்திய முஸ்தீபுகளை மேற்கொண்டுவந்த அமெரிக்காவும் அதன் வளைகுடா நேச நாடுகளும் சிரிய மக்களின் நியாயமான எழுச்சியை துருக்கியுடன் இணைந்து எகிப்தில் ஜனாதிபதி மூர்ஸி தலைமையிலான இஸ்லாமிய அரசு கையாள முனைந்ததனை அறிந்து கொண்டவுடன் எகிப்தில் இராணுவ சதிப் புரட்சிக்கான உத்தரவை பிறப்பித்தனர்.
துருக்கி மற்றும் எகிப்தின் உறவுகள் பிராந்தியத்தில் பாலஸ்தீன போராளிகளை பலப் படுத்துவதோடு ஐரோப்பிய மத்திய கிழக்கு பொருளாதார உறவுகளில் பாரிய தாக்கங்களைக் கொண்டிருப்பதனாலும், மத்திய கிழக்கில் எகிப்தின் செல்வாக்குடன் இஸ்லாத்தின் எழுச்சி ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தினாலுமே முதற்கட்டமாக எகிப்தில் கை வைக்கப் பட்டது.
சிரியாவின் மக்கள் எழுச்சியின் வெற்றி நடுநிலைமையான இஸ்லாமிய துருக்கி மற்றும் இஸ்லாமிய எகிப்தின் கையில் சென்று விடுவதனையும் பிராந்தியத்தில் அவர்களது செல்வாக்கு அதிகரித்து விடுவதனையும் சவூதி தலைமையிலான வளைகுடா மன்னர்களும் அவர்களின் சர்வதேச எஜமானர்களும் விரும்பவில்லை
தற்பொழுது அவர்கள் எதிர்பார்த்த வேகத்தில் எகிப்தில் ஆட்சி மாற்றம் இடம் பெற்று விடாத நிலையில் உலகின் கவனத்தை அவசர அவசரமாக சிரியாவின் பக்கம் திருப்ப முனைந்துள்ளனர்.
ஏதோ எகிப்தில் அரசியல் பாதுகாப்பு ஸ்திரத் தன்மை இருப்பதாக உலகிற்கு காட்டுவதற்காகவே அரபு லீக் மாநாட்டை நேற்றும் இன்றும் பற்றி எரிகின்ற எகிப்தில் கூட்டியுள்ளனர
வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள் தாக்குதல் நடாத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டினை எகிப்தும் அதன் தலைமை முப்தியும் எடுத்திருப்பதாகும். இந்த எல்லா நிலைப்பாடுகளும் வெள்ளை மாளிகையில் திட்டமிடப்பட்டு அரபுலகத்தை குழப்பத்தில் தள்ளும் ஏற்பாடுகளாகும்.
ஷியா சுன்னி பனிப்போரை வரலாறு நெடுகிலும் தமது நலன்களுக்காகவே கையாண்டு வந்த அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ஒரு ஈராக்கை சிரியாவில் தோற்றுவிப்பதன் மூலம் முழு மத்திய கிழக்கையும் அதன் வளங்களையும் சுரண்டுவதனையே தமது பிரதான இலக்காக கொண்டுள்ள
ஈராக்கிலோ சிரியாவிலோ பஹ்ரைனிலோ வளைகுடா நாடுகளிலோ ஷீயாக்கள் முழுமையாக முடக்கப் படுவதனை அமெரிக்காவும் இஸ்ரேலியரும் மேலைத்தேய நேச நாடுகளும் விரும்புவதில்லை, இஸ்ரவேலை உலக வரை படத்தில் இருந்து ஒழிப்பதாக ஈரான் அறைகூவல் விடுகின்ற பொழுதெல்லாம் மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரிக்கும், வளைகுடா குட்டி சுல்தான்கள் ஆயுதம் வாங்கி குவிப்பார்கள்.
அதேபோன்று ஈரான் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்வதாக அறிவிப்பதும், ஈரான் தாக்கப் பட்டால் வளைகுடாவில் உள்ள அமெரிக்க முகாம்கள் தாக்கப் படும் என்றும் ஈரான் ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுவதுமாக அரபுலகில் பதட்டம் என்ற பெயரில் அரபுலக வளங்களை யூத கிறிஸ்தவ சியோனிஸ காலனித்துவ சக்திகள் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.
இப்பொழுது தமக்கும் புதிய உலக ஒழுங்கில் கப்பம் வேண்டும் என்று ரஷ்யாவும் கிளம்பியிருக்கின்றது, நாளை சீனாவும் நேச நாடுகளும் சுரண்டலில் பங்காளிகளாக மாறுகின்ற பொழுது உணவுப் பாத்திரத்தில் நாய்கள் பாய்வது போல் முஸ்லிம் உலகில் நாளா திக்கில் இருந்தும் காபிர்கள் தலையிடுவார்கள். வீட்டோ என்பார்கள் உசுப்பேத்துவார்கள் இறுதியில் அம்போ என்று கப்பம் பெற்று கைவிட்டு விடுவார்கள்.
எகிப்தில் இராணுவ சதிப் புரட்சி அரங்கேற்றப் பின்னர் சரிந்திருந்த அமெரிக்க டாலர் நாளுக்கு நாள் ஸ்திரமடைந்து வருவதோடு உலகில் தங்கத்தின் விலையும் உயர்ந்து செல்கின்றது, மேலைத்தேய நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து காப்பாற்ற அரபு வசந்தமும் ஷியா சுன்னி பனிப் போரும் இலாகவமாக கையாளப் படுகின்றன.
முஸ்லிம் உம்மத்திற்கு எதிராக அரங்கேற்றப்படும் சதிகள் ஒவ்வொரு அரபு இஸ்லாமிய தேசத்திலும் பொதுமக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது, வளைகுடா நாடுகளிலும் அரபு வசந்தம் போன்ற ஒரு நெருக்கடியை தோற்றுவிப்பதற்கான தேவை அமெரிக்க தலைமையிலான யூத சியோனிஸ சக்திகளுக்கு இருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ், பிராந்தியத்தில் எழுந்துள்ள உண்மையான இஸ்லாமிய எழுச்சியும் எல்லைகடந்த அதன் பிரதிபலிப்புக்களும் மேலும் பல அரபு முஸ்லிம் நாடுகளில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதோடு முஸ்லிம் உலகின் எதிரிகளை சரியான பரிமாணங்களில் எதிர் கொள்வதற்கான ஆரம்பமாகவே இருக்கும்.

Post a Comment