Header Ads



புதிய ஐபோன்கள் சாதிக்குமா..?


கடந்த சில நாளாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இரு வகை ஆப்பிள் ஐபோன்கள், ஒரு பக்கம் கூகுள், மைக்ரோசாப்ட்டுக்கு சவாலாக இருந்தாலும், உலக சந்தையை பிடிக்க உதவுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐபோன்கள் விலை உயர்ந்தவை என்பதால் உலக சந்தையில் கோலோச்ச முடியவில்லை. உலகிலேயே  அதிக ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகும் சீனாவில், மலிவான ஸ்மார்ட்போன்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

ஸ்மார்ட் போன் சந்தையில் 43 சதவீதத்தை தான் ஆப்பிள் கொண்டுள்ளது. மீதம் எல்லாம் சாம்சங் முதல் லெனோவா போன்ற மலிவு விலை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வைத்துள்ளன. அமெரிக்காவில் சமீப காலமாக வெளியிடப்பட்ட ஐபோன்கள் கிட்டத்தட்ட பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதால், ஏற்கனவே, ஐபோன்4, 5 வரை வாங்கியவர்கள், புதிதாக வாங்க தயாரில்லை. அதனால் அங்கும் விற்பனை சரிவு காணப்பட்டது. 

இதற்கெல்லாம் முடிவு கட்ட எண்ணி இரு வகை போன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது. ஒன்று, ஐபோன் 5எஸ். இன்னொன்று 5சி. முதல் வகையில் டச் ஐடி என்ற, கைரேகை சென்சார், ஐவொர்க் உட்பட ஏகப்பட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா, சீனாவில் சந்தையை பிடிக்கவே மலிவு விலையில் 5சி வெளியிடப்பட்டுள்ளது.   இரண்டும், வரும் 20 ம் தேதி சில்லரை கடைகளில் பல நாடுகளில் கிடைக்கும்.

 இதில், 5எஸ் போன், இதுவரை வந்துள்ள ஐபோன்களில் எல்லாம் இல்லாத புதிய வசதிகள் உள்ளன. ஐஓஎஸ்7 பொருத்தப்பட்டு இயங்கும் இந்த வகை போன் என்பதால் பல புதிய வசதிகள் உள்ளன. இந்த ஓஎஸ்7 , ஏற்கனவே உள்ள எஸ்4, 5 வகைகளில் மட்டும் இலவசமாக  பொருத்த முடியும். அதற்கு முந்தைய வகை போன்களில் பொருத்த முடியாது. அதனால், பழைய ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான். 

மலிவு விலை ஐபோன் என்று சொல்லப்படும் 5சி போன், அமெரிக்காவில் கான்ட்ராக்டுடன் மலிவு தான். ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கரன்சி மதிப்புக்கு ஏற்ப, விலை மலிவாக இருக்காது என்பதே உண்மை என்று சந்தை தரப்பினர் கூறுகின்றனர். 5சி போன் ஆரம்ப விலை கான்ட்ராக்ட்டில்  99 டாலர்; கான்ட்ராக்ட் இல்லாமல் 549 டாலர். சீன யுவான் கரன்சியில் அதன் விலை 4488; அதாவது 200 டாலர் அதிகம். 

3000 யுவானுக்கு எல்லாம் சூப்பர் ஸ்மார்ட் போன் கிடைப்பதாக சீன மக்கள் பொதுவான கருத்து. இதனால் சீனாவில் 5சி போன் எதிர்பார்த்த அளவுக்கு சந்தையை பிடிக்குமா என்பது சந்தேகம் என்கின்றனர் விற்பனையாளர்கள். சீனாவை போலவே இந்தியாவிலும் அதன் விலை மலிவாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், 5எஸ் போனுக்கு வரவேற்பு இருக்கலாம். 

No comments

Powered by Blogger.