இந்தியா பயணமானார்
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று 04யைச் சேர்ந்த சிரேஷ்ட விவசாயப்போதனாசிரியரும், பாடவிதான உத்தியோகத்தருமான ஏ.எல்.முபாறக் விவசாய அமைச்சின் புலமைப்பரிசில் பெற்று கடந்த (08.09.2013) ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமானார்.
இந்தியா முகாமைத்துவ நிறுவன லக்னோ இந்தியா பல்கலைக்கழகத்தில் கடந்த 08ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விவசாய மற்றும் விவசாய வியாபார முறையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி நெறி நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்ள விவசாய அமைச்சின் புலமைப்பரிசில் மூலம் இலங்கையில் இருந்து 15 உத்தியோகத்தர்கள் கலந்து கொள்கின்றனர். அம்பாரை மாவட்டத்தில் இருந்து தழிழ் மொழி மூலம் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர் இவர் மாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment