களனி கங்கையின் மேலால் ஆறு வழிப் பாதை
(எம்.எம்.ஏ.ஸமட்)
களனி கங்கையின் மேலால் ஆறு வழிப் பாதை மேம்பாலம் அமைக்க வீதி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெகலியகொட மற்றும் பேஸ்லைன் வீதிப் பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலைக் இலகுபடுத்தும் நோக்கில் களனி கங்கையின் மேலால் ஆறு வழிப் பாதையுடைய மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. துறைமுகம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் 321 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்நிர்மானத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போதுள்ள களனி ஜப்பான் நட்புறவு மேம்பாலத்துக்கு சமமாக மேலதிகமாக அமைக்கப்படவுள்ள இந்த ஆறுவழிப் பாதை மேம்பாலமானது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி, துறைமுக வீதி மற்றும் கொழும்பு பேஸ்லைன் வீதிகளுடன் இணைக்கக் கூடியதாக நிர்மானிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்மேம்பால நிர்மானத்தினூடாக குறித்த பிரேதச வாகனப் போக்குவரத்தில் நெரிசல் தவிர்க்கப்படுவதுடன் சுமுகமான பயணத்துக்கு இப்புதிய மேம்பாலம் துணைபுரியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் சர்வேதேச ஒத்துழைப்பு முகவர் அமைப்பின் நிதி உதவியுடன் நிர்மானிக்கப்படவுள்ள ஆறு வழிப் பாதை மேம்பாலம் 415 மீற்றல் நீளத்தையும் 10.66 மீற்றர் அகலத்தையும் கொண்டதாக அமையவுள்ளது. அத்துடன், இப்பால நிர்;மானப் பணியினை மூன்று வருட காலத்துக்குள் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment