Header Ads



புகைப்பதை விட்டால் நிம்மதியாக தூங்க முடியும்

புகைப்பதை விட்டால் நிம்மதியாக தூங்க முடியும் என ஒரு ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது. புகைபிடிப்பதால் பல்வேறு நோய்களும், அவற்றின் மூலம் மரணமும் ஏற்படுகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், புளோரிடா பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், புகைபழக்கத்திற்கும், தூக்கத்திற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு சிகரட்டும், 1. 2 நிமிட தூக்கத்தை கெடுப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. புகைபிடிப்போரில் 11.9 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 10.6 சதவீதம்பேர், நள்ளிரவில் எழுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.