வாழைச்சேனை அஹமட் வித்தியாலயத்திற்கு ஜேர்மனியில் வசிக்கும் சகோதரர் உதவி
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்திற்கு (22) இலட்சம் ரூபாய் பொறுமதிமிக்க காணிக்கையளிப்பு வைபவம் வியாழக்கிழமை 26.09.2013 நடைபெற்றது.
ஜேர்மனி நாட்டில் வதியும் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தை சோர்ந்த ஆதம்பாவா ஜெமீலா தம்பதிகளின் புதல்வாரன ஏ.எம்.கலீல் என்பவரோ மேற்குறித பொறுமதிமிக்க காணியினை அன்பளிப்பு செய்துள்ளார்.
இக்காணியினை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம் தாஹிர் தலைமையில் பாடசாலை பிரதான மன்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அஹ்மட்லெப்பை,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.கே.றஹ்மான்,எஸ்.ஏ.நஸீரா,வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத்,உள்ளீட்ட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்காணியினை காணி உரிமையாளர் ஏ.எம்.கலீல் அவர்கள் உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அஹ்மட்லெப்பையிடமும் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம் தாஹிர் அவர்களிடமும் தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு கையளித்தார்.
காணியினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அஹ்மட்லெப்பை உரையாற்றுகையில் நான் எனது கல்விப்பணி சேவைகாலத்தில் பாடசாலை என்றால் பரிசளிப்பு விழா,பாராட்டுவிழா,கட்டிடத்திறப்பு விழா,அடிக்கல் நடுவிழா என்றும் ஏராளமான நிகழ்வுகளை சந்தித்திருக்கின்றேன்,அந்நிகழ்வுகளில் கலந்து கொண்டும் இருக்கின்றேன். ஆனால் இன்று வித்தியாசமானதொரு விழா 'காணிக்கையளிப்பு விழா' உன்மையில் இப்பாடசாலையின் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கமைவாக பாடசாலை கட்டிடம் ஒன்றினை கட்டுவதற்கான இடவசதியில்லாத நிலை காணப்பட்டது.
இந்நிலையினை கருத்தில் கொண்ட சகோதரர் ஏ.எம்.கலீல் அவர்கள் எந்தவொரு இலாபநோக்கங்களையும், கருத்தில் கொள்ளாது இஸ்லாம் கூறுகின்ற 'சதக்கதுல்ஜாரியா'என்ற நிரத்தர தர்மத்தை செய்துள்ளார். இவர் எமது சமூகத்தில் இருக்கின்ற பணம்படைந்த சொல்வாக்கு மிக்கவர்களில் ஓர் முன்மாதிரியானவர் மனிதர் என்பது புலனாகின்றது.
Post a Comment