Header Ads



முஸ்லிம் பயங்கரவாதிகள் எங்கிருக்கிறார்கள் - கோத்தாவிடம் கேட்கும் ரவூப் ஹக்கீம்

(றிபான்)

பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முஸ்லிம் பயங்கரவாதிகளை பாதுகாப்பு செயலாளர் இனங் காட்ட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று அக்குறணை புளுகொஹதென்னயில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்துப் பேசியதை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. நீண்ட கால யுத்தம் முடிவுற்று சமாதானச் சூழல் மலர்ந்துள்ள நிலையில் பாதுகாப்புச் செயலாளர் பல நல்ல விடயங்களைப் பேசும் அதேநேரத்தில் சில சர்ச்சைக்குரிய, முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியின் சகோதரர் என்றாலும் அவர் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான கருத்துகளை வெளியிட முடியாது. முஸ்லிம் பயங்கரவாதிகள் எங்கிருக்கிறார்கள்? அவர்கள் யார்? என்று பாதுகாப்பு செயலாளர் இனம் காட்ட வேண்டும். பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ள குற்றச் சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கின்றேன்.

எல்லாச் சமயங்களிலும் மதப் பிரிவுகள் இருக்கின்றன. முஸ்லிம்களிடம் மாத்திரம் மதப் பிரிவுகள் காணப்படவில்லை. பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் காரணம் காட்டி அவர்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க முடியாது. இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையினரால் காமாலைக் கண் கொண்டே நோக்கப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

4 comments:

  1. good speech but it should be in a press conferences or in assembly meeting then only it will work strongly

    ReplyDelete
  2. சார், உங்களைப் போல் ஒரு சூடு சுரணை அற்ற தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகம் இது வரை காணவில்லை. இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு எதை நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. அதே நேரம் இதுவரை எதை சாதித்தீர்கள் என்றும் புரியவில்லை.

    ReplyDelete
  3. இதை பார்லிமென்டில் பேசுவாரா, மக்களை ஏமாற்ற இதுதான் வழி
    இவறுக்

    ReplyDelete
  4. நீங்களெல்லாம் மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த பிள்ளைகள் என்று பெருமைக்கு மார்பு தட்டுவீர்கள், அஷ்றஃப் இப்படித்தான் கோலையாக இருந்தாரா?இல்லவே இல்லை. அஷ்ரஃப் பாளிமெண்ட் வந்தால், பேச ஆரம்பித்தால் சஃபையே நடங்கும்,மனிதர்கள் எவருக்கும் அஞ்சாத ஒரு ஜீவன்.ஒருத்தன் கூட எதிர்த்து நிற்கமாட்டான். அவரின் தொல்லை தாங்க முடியாமலே அவருக்கு சமாதியும் கட்டினார்கள்,அப்படியா நீங்கள்? நீங்களெல்லாம் செத்த பாம்புகள்.உள்ளே ஒரு பேச்சு, வெளியே ஒரு பேச்சு. நாட்டின் நீதி அமைச்சருக்கா இப்படி ஒரு நிலைமை?பரிதாபம்.

    ReplyDelete

Powered by Blogger.