Header Ads



அமெரிக்கா தயாரித்துள்ள முட்டை

அமெரிக்க உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தாவர மூலக் கூறுகளை கொண்டு சைவ முட்டை ஒன்றை தயாரித்துள்ளது. இது சைவ பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முட்டை சைவமா, அசைவமா என்ற விவாதம் நீண்ட நாட்களாக உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சைவமோ, அசைவமோ இனி அந்த கேள்விக்கு இடமே இருக்காது என அமெரிக்காவின் உணவு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உணவு நிறுவன தலைவர் ஜோஸ் டெட்ரிக் கூறியதாவது,

பயறு வகைகள், சோயா உள்ளிட்ட 11 வகையான தாவரங்களின் மூலக் கூறுகளைக் கொண்டு செயற்கை முட்டையை தயாரித்துள்ளோம். இது சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான முட்டையாக இருக்கும். இயற்கையான முட்டையை போலவே காட்சி அளிக்கும் இந்த முட்டை முழுக்க முழுக்க தாவரங்களின் உணவு அடிப்படையை கொண்டு தயாரிக்கப்பட்டவை. இயற்கை முட்டையை போலவே இந்த முட்டை சத்து நிறைந்தும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும். அதே நேரத்தில் பிற முட்டைகளை விட 19 சதவீதம் உற்பத்தி செலவு குறைவு என்பதால் சில்லறை விற்பனையில் விலை மலிவாகவும் விற்பனைக்கு வரும்.இது முழுக்க முழுக்க சைவ முட்டை என்பதால் மற்ற முட்டைகளின் விற்பனை சந்தை இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டாது.இவ்வாறு நிறுவன தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.