தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உடன்படிக்கை விபரம்
1. ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதில் 'சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்' மிகப் பிரதான கூறாக அமைகிறது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், தேசிய நல்லிணக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இவ்விரு சமூகங்களினதும் நல்லிணக்க முயற்சியின் ஒரு அம்சமாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்படுகின்றது.
2. அமையப்போகும் வட மாகாண சபையின் செயற்பாடுகளானது, பண்பாட்டு விழுமிய அரசியலினதும், நல்லாட்சியினதும் மூலக்கூறுகளான ஜனநாயகம், நீதி, தர்மம், சமத்துவம், மனிதநேயம், நல்லிணக்கம், சகவாழ்வு, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டவாட்சி போன்றவற்றின் அடிப்படைகளில் அமைதல் வேண்டும்.
3. 1990ம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இருப்பு, பாதுகாப்பு, மத பண்பாட்டுக் கலாச்சார உரிமைகள் என்பன உறுதி செய்யப்படுவதோடு இம்மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டமானது, வடக்கு முஸ்லிம்களுக்கான காணிப்பகிர்வு, வீடமைப்பு, தொழில் வாய்ப்பு, மற்றும் வாழ்வாதாரம் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.
4. வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் மக்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
'1990ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் பாரம்பரியக் குடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் வட மாகாணம் என்பது முஸ்லிம் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். அவர்கள் தமது சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும், தமது பூர்வீகக் குடியிப்புக்களையும் கைவிட்டு, நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை வருந்தத்தக்கதாகும்.'
'வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களும், அவர்களின் சந்ததிகளும் இயன்றவரை விரைவாக தத்தமது பாரம்பரியக் குடியிருப்புப் பகுதிகளில் மீளக்குடியேறி தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றுறுதி கொண்டுள்ளது. அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவதற்கு ஊக்குவிக்கப்படுவதோடும், தமது குடியிருப்புக்களை மீளமைத்து தமக்குரிய கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும்.'
'வட மகாண முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும். இம்மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும், சமத்துவமானதுமான கவனிப்பு எவ்விதமான பாரபட்சங்களுமின்றி கிடைக்கப் பெறுவதை இம்மாகாண சபை உறுதி செய்யும்.'
5. மேற்படி மீள்குடியேற்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையும், செயலணியும் இரு தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படல் வேண்டும்.
6. அமையப்போகும் வடக்கு மாகாண சபையின் மாகாண சபை நிர்வாகக் கட்டமைப்புகளில் முஸ்லிம்களின் போதிய பங்குபற்றுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
7. வட மாகாணத்தில் வாழும் சகல சமூகங்களும் பரஸ்பர புரிந்துணர்வோடும், நல்லிணக்கத்தோடும், அர்த்தபூர்வமான சகவாழ்வு மேற்கொள்வதனை ஊக்கப்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்குமான உழைப்பினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு இதயசுத்தியுடனான அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும். மேலும் அமையப்போகும் வட மாகாண சபையானது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட நல்லாட்சிப் பண்புகளைப் பிரதிபலிக்கும் முன்மாதிரியான ஒரு மாகாண சபையாக இந்நாட்டில் செயற்படுவதற்கான சகல பங்களிப்புகளையும் அது செய்யும்.
8. மேற்படி உடன்பாடுகளின் அடிப்படையில் 2013ம் ஆண்டிற்கான வட மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்டபாளர் பட்டியலில் மன்னார் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கணிசமான வாக்குகளைப் பெற்றும் தெரிவு செய்யப்படாதவிடத்து நியமன முறை மூலம் அவரது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் பற்றி சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும்.
மேற்சொன்ன விடயங்களை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு செயற்படுத்துவோம் என உறுதிப்படுத்தி மன்னாரில் வைத்து 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் திகதியாகிய கையொப்பமிடுகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு சார்பாக மாவை சோ. சேனாதிராஜா (பா.உ) எம்.பி.எம். பிர்தௌஸ், தலைவர், மத்திய நிறைவேற்றுக்குழு
மனதுக்கு நிறைவாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
வெறும் தேர்தலுக்காக மட்டும் இல்லாமல் எப்போதுமே இந்த ஒற்றுமை இருக்கவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்து இருந்தாலும் 2/3 பெரும்பான்மை உடன் வெல்ல வேண்டும். அது தான் இப்போதைய தேவை. இதற்க்கு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் தாங்கள் சொந்தங்களுக்கு அழைத்து
த.தே.கூ.க்கு வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் அதே நேரம் அதை உறுதிபடுத்த வேண்டும் . அரசு எவ்வாறு நடந்து கொள்ளும், அரச அமைச்சர்கள் எவ்வாறு வாக்களிக்கும் நாளில் நடந்துகொள்ளுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லவிதமன் தில்லு முள்ளும் நடக்கும். இருந்தாலும் நிச்சயம் உண்மை வெல்லும் என்ற பெரிய நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
சில அரச தமிழ் பேசும் அமைச்சர்கள் இந்த அரசிடம் சொந்த மக்களை அடகு வைத்து வடக்கில் தேர்தலை நோக்க கொண்டு இனவாதம் பேசி பேசி மேலும் தாங்களின் வாக்கு வாங்கியை பெருக்க கடும் முயற்சிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். கொழும்பில் எப்படி குடும்ப ஆட்சியோ அதே போல இந்த தேர்தலிலும் வடக்கில் குடும்ப ஆதிக்கத்தை நிலை நிறுத்த சிலர் கடும் முயற்சிகள் செய்கிறார்கள், பல வித்தைகள் காட்டுகிறார்கள். பல நாடகம் கூட நாங்கள் தினமும் பார்க்கிறோம். இது தேர்தல் நாடகம். இதை நம்பிவிட வேண்டாம். இதை மக்கள் புரிந்துகொண்ட நிகழ்காலத்தை பற்றி யோசிக்கும் அதே நேரம் எதிர்காலத்தை பற்றி மிகவும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
நன்றி
ஜெகன் திருப்பதி
ரியாத்
நல்ல முயற்சி முன்னெடுத்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஇலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடக் கண்டிருக்கின்றோம். ஆனால் மக்கள் நலன் சார்ந்து கைச்சாத்திடப்பட்டதாக கூறப்படும் அவ்வொப்பந்தங்களில் ஒன்று கூட மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்தது கிடையாது. மாத்திரமல்லாது அவை மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டதும் கிடையாது. மாறாக அவற்றால் மக்கள் பிரயோசனம் அடைந்ததைவிட அரசியல்வாதிகள் தமது சுயலாப அரசியலை மேம்படுத்தியதுதான் மிச்சம். அந்த வகையில் தற்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருக்கும் அரசியல் கூட்டணிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது மக்கள் பார்வைக்காகவும் வழங்கப்பட்டிருப்பது இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இது எதிர்கால முஸ்லிம் அரசியல் குறித்த நம்பிக்கை தருவதாகவும் சுயலாப அரசியல் தொழிலாழிகளுக்கு ஒரு சாட்டை அடியாகவும் அமைந்துள்ளது. இவ் ஒப்பந்தம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலியுறுத்துவதோடு தேசிய ஒற்றுமையையும் வலியுறுத்தி நிற்கிறது.
ReplyDeleteபோருக்குப்பிந்திய இலங்கையின் அபிவிருத்தியில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தவிர்க்க முடியாத ஒன்றாகும். யுத்த வெற்றிக்களிப்பின் மயக்கத்திலும், மமதையிலும் இருந்து நிதானத்திற்கு வராத தற்போதய இலங்கை அரசு, இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் பேரினவாத சக்திகளை தண்டிப்பதில் அக்கரை செலுத்தாமையினால் இலங்கை அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மாத்திரமல்லாது சர்வதேச மட்டத்திலும் பல அவப்பெயர்களும் நெருக்கடிகளும் அந்த பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளினால் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உள்ளுர் அரசியலிலிருந்து தேசிய அரசியல் வரை நல்லாட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதான குறிக்கோளாக காண முடிகிறது. அதனை நோக்கியே கடந்த 8 வருடங்களாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அவ்வியக்கத்தின் முன்மாதிரி அரசியல் வழி முறைக்கு கிடைத்த வெற்றியாகவே பல நுாற்றாண்டு கால கொள்கை அரசியலில் நிலைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பார்க்க முடிகிறது.