Header Ads



தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள முஸ்லிம்கள்

(இ. அம்மார்)

இம்முறை மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் வரலாற்று ரீதியிலான முஸ்லிம்கள் பாரிய பின்னடைவைக் கொண்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் கண்டி மாவட்டத்தில் 140000 வாக்காளர்களையும் மாத்தளை மாவட்டத்தில் 38000 வாக்காளர்களையும் நுவரெலியாவில் சுமார் 25000 வாக்காளர்களையும் கொண்டுள்ளனர். இந்நிலையில் 58 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபையில் வெறுமனே மூன்று உறுப்பினர்களை மட்டுமே தெரிவு செய்யப்பட்டு இருப்பது முஸ்லிம்கள் வரலாற்று ரீதியலான தோல்வியை அடைந்துள்ளனர்

ஆனால் சுமார் 15 சத வீதத்தைக் கொண்ட மலையகத் தமிழர்கள் மத்திய மாகாணத்தில் 25 விகிதமான தமிழ்  உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளனர். இது அவர்கள் அரசியல் ரீதியாக அடைந்த மிகப் பெரிய வெற்றி என்பதுடன் அவர்கள் அரசியல் ரீதியாக சிறந்த முறையில் சிந்தித்து செயற்பட்டுள்ளார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. முஸ்லிம்களுடைய தோல்வியில் ஆளும் கட்சியில் பிரதிநிதித்துவம் குறைவதற்கு இனவாதம் ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பள்ளி உடைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என பரப்புரை செய்தமையும் மறுபுறம் சிங்கள அபேட்சகர்கள் முஸ்லிம்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என இன ரீதியாக செயற்பட்டதும் காரணமாக அமைந்ததுடன் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சியின்மையும் வழிகாட்டுவதற்கான ஊடகம் ஒன்று இல்லாமையும், சிறு சிறு விடயங்களுக்காக உணர்ச்சி வசப்படுதல் போன்றவையே பிரதிநிதித்துவம் இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மத்திய மாகாணத்தில் 58 உறுப்பினர்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11 உறுப்பினர்களையும். ஐக்கிய தேசியக் கட்சியில் இரு உறுப்பினர்களையும் மலையக மக்கள் முன்னணியில் ஒரு உறுப்பினர்களையும்  கொண்டுள்ளனர் மொத்தமாக 14 உறுப்பினர்களைப் பெற்றிருப்பது மத்திய மாகாண சபையைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழர்கள் இருக்கின்றார்கள. ஆனால் முஸ்லிம்கள் வெறுமனே மூன்று உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மிக இக்கெட்டான நிலையில் உள்ளனர். இதன் பலாபலன்களை முஸ்லிம்கள் எதிhகாலத்தில் உணர்வார்கள்.

அதே போன்று குருநாகல் மாவட்டத்தில் 117 வாக்காளர்களையும் புத்தளம் மாவட்டத்தில் வாக்காளர்களையும் கொண்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் இரு உறுப்பினர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு இருப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். குருநதகல் மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இம்முறை ஒரே ஒரு வேட்பாளர் தெரிவு மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே போன்று புத்தளம் மாவட்டத்திலும் இதே நிலையைதான் காணப்படுகின்றது. புத்தளத்தில் கணிசமான வாக்காளர்கள் காணப்பட்ட போதிலும் ஒரே ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  வடமேல் மாகாணத்திலும் பாரிய பின்னடைவை முஸ்லிம்கள் எதிர் நோக்க வேண்டியுள்ளனர்.

விசேடமாக ஆளும் தரப்பில் முஸ்லிம்கள் எவரும்  தெரிவு செய்யப்படாமை என்பது ஆளும் தரப்பில் ஒரு பாரிய அதிருப்தியையும் முஸ்லிம்கள் இல்லாவிட்டாலும் சக்திமிக்க ஒரு ஆளும் தரப்பை ஒருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

எனவே இது எதிhகால முஸ்லிம்களின் வாழ்வாதார நிலைக் பாரிய பின்ளடைவை ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதனால் ஐந்து வருட காலத்திற்கு முஸ்லிம்களின் அரசியல் அனாதைகளாக இருக்க வேணடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு முகம்கொடுப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும்.

1 comment:

  1. Kandy il muslim piradinidittuwam tittamitta sadiyinal ilakkappattulladu.
    > SLMC UNP inaindu terdalil nindra 2004, 2009 il 4 piradinidittuwam perappattadu.
    Immurai SLMC taniyaaha kalamirangiya podum UNP il 7 wetpaalar pottiyittanar.
    >1 welwade kadinamaana UPFA il 3 wetpaalrhal niruttappattanar.
    Iduwe piradaana kaaranam.
    Annalawaaha katchyhalukku kidaita muslim waakkuhal
    *UNP 75000 (Ashad sally in 55000+ awarukku waakkalikkaada 20000)
    *UPFA 15000 (rizvi farook in 15000)
    *SLMC ku 10000.
    **** mottam 1 ilatcham waakkuhali alittu werum 3 piradinidihalai petru totrupponom.....

    ReplyDelete

Powered by Blogger.