ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி பகிடிவதை
(Tn) புதிய மாணவ, மாணவிகளை ஹிரிகட்டுவ ஆற்றின் ஓரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்ததாக அடையாளம் காணப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் ஏழு பேருக்கும், நான்கு மாணவிகளுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கராஜ, ஆரிய திலக்க விடுதியில் புதிய மாணவ, மாணவியரின் ஆடைகளைக் களைந்து, மலசல கூடத்தில் தரையில் புரட்டி மோசமாக இந்த சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை மோசமான வார்த்தைகளால் ஏசி மலசலகூடத்தில் ஊர்ந்து செல்லுமாறு மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இக்கொடிய பகிடிவதை தொடர்பாக புதிய மாணவ, மாணவியர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் உபவேந்தரோ, நிர்வாகமோ தீர்வை வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் உயர் கல்வி அமைச்சரிடம் நேரில் இதுபற்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உடன் விசாரணை நடத்தி, குற்றமிழைத்தோரைப் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் பகிடிவதையை மேற்கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மாணவர்கள் மூவர் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி வீடுகளுக்குச் சென்றுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இப் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு வாரங்களாக மோசமான வகையில் பகிடிவதை காணப்படுகிறது. இதனால் புதிய மாணவர்கள் விரக்தி கொண்டுள்ளனர். முன்னர் இப்பல்கலைக்கழகத்தில் மோசமான பகிடிவதை காணப்பட்டது கடந்த பல வருடங்களாக தண்டனை விதிக்கப்பட்டதால் பகிடிவதைச் சம்பவங்கள் குறைந்தன.
பல்கலைக்கழகத்தை இந்த நிலைமைக்கு கொண்டுவர 300 மாணவர்களுக்கு தண்டனை வழங்க நேரிட்டதாக உயர் கல்வி அமைச்சின் மாணவர் நடவடிக்கை தொடர்பான பணிப்பாளர் நாயகம் கீர்த்தி மாவெல்லகே தெரிவித்தார்.
அறிவு என்பது இவர்களிடத்திலில்லை என்பதே சரியானதாகும் கல்வி என்பது எது என தெரியாத அமைப்பில் தான் இலங்கைபோன்ற நாடுகளில் இந்த பகிடி வதை ஏன்.,ஐரோப்பா மற்றும் midle east மற்றும் பல நாடுகளில் நாம் இந்த பகிடி(வதை)காணமுடியாது ஏன் இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்த நாடுகளில் இந்த பகிடிவதை நீண்டு கொண்டு போகிறது?தெரிந்தவர்கள் நல்லதொரு
ReplyDeleteஆக்கபூர்வமான ஒரு ஆக்கம் எழுதலாமே!
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களே வெளிநாட்டுப் பெண்களை கலியாணம் முடிக்க ஆசைப்படுவதாக பகிரங்கமாக அறிக்கை விட்டு உலகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும்போது, பல்கலைக்கழக மாணவர்களின் இத்தகைய வெறுக்கத்தக்க செயல்களெல்லாம் இவர்களுக்கு ஜுஜுபி.
ReplyDeleteஅவமானத்துக்குள்ளாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு எனது அனுதாபங்கள்!
பகிடிவதை செய்த பழைய மாணவர்களுக்கு நடவடிக்கை எடுப்பது போன்று, இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையிட்டும் நடவடிக்கைகளை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இந்தக்காடையர்கள் எதற்கு பல்களைக்கழகம் செல்கின்றார்கள். சட்டத்தால் தண்டிக்கபடவேண்டும். தனிப்பட்ட முறையிலும் தண்டிக்கப்படவேண்டும்.
ReplyDeleteஇதுபோன்ற பகிடிவதைகள் செய்யும் நாய்களை சுட்டுத்தள்ளவேண்டுமே தவிர வேறு வழியில்லை. பார்க்கலாம் எமது கைகளில் கிடைத்தால்.
ReplyDeleteithellam oluga poranthirukathugal
ReplyDeleteithula yaarum university pohala pola
ReplyDeletesifri faheem
ReplyDeleteரொம்ப இன்ரெஸ்டிங்போல. ஏதோ சாதிச்சிட்டம் என்ற எண்ணம்போல. நல்லதொரு விசயத்துக்கு வக்காளத்து வாங்கினல்லும் பறவாயில்ல. இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்லுமளவுக்கு நாங்கள் பிறக்கவுமில்லை வளர்க்கப்படவுமில்லை. யுனிவர்சிட்டி போனால் இதை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றில்லையே. உமது தங்கையை உடம்பில் ஒட்டுத்துணியும் இல்லாமல் உருட்டு பிரட்டி செய்யாதவேலையெல்லாம் செய்துவிட்டு இது பகிடிவதை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?