Header Ads



அகதிகளாகி பட்ட துயரங்களை ஒரு போதும் மறந்துவிட முடியாது - றிப்கான் பதியுதீன்

(எ.ஆர்.எம்.ஹலீம்)

வடக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் நல்லது செய்ய நினைத்தால் அல்லது எங்களது நலன்களில் அக்கறை கொண்டிருந்தால் இத்தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளட்டும் அதுவே எமக்கு செய்யும் பேருதவியாகும். வடக்கில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தனித்து களம் இறக்கியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் தெரிவித்துவருவதானது மன்னார் மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது,

மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம்களின் வாக்குப்பலம் சொற்பமானதாகும் தனது சுய இலாபத்திற்காக மக்களின் வாக்குகளை பிரித்து பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கச்செய்வதுதான் முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் இதற்கு மக்கள் ஒரு  போதும்  இடம் தர மாட்டோம்;. இதனால் பாதிப்படையப் போவது ரவூப் ஹக்கீம் அல்ல எமது வடமாகாண மக்கள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 22 வருடங்களாக எமது மக்கள் அகதிகளாகி பட்ட துன்ப துயரங்களை ஒரு போதும் எம்மால் மறந்துவிட முடியாது. மீண்டும் அவ்வாறானதொரு இடப்பெயர்வு குறித்து நிணைததுப்பார்கக் கூட முடியாது.

எமது மாவட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் ஆளும் ஆட்சியில் இருப்பதன் மூலம் மட்டும் தான் முடியும் என்பது யதார்த்தமாகும். எதிர்கட்சியில் அமர்ந்து எதனையும் சாதிக்க முடியாது. எனது பதவிக்காலத்தில்  மக்களின் விமேசானத்திற்காக அதனை பயன்படுத்திவந்துள்ளேன்.என்னிடத்தில் இனவாதம் மதவாதம் பிரதேசவாதம் என்பன இல்லை.எல்லா மக்களும் சமமானவர்கள்.இறைவனது படைப்பில் மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்றே பார்த்துவந்துள்ளேன். இன்றும் கூட மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக் கொடுத்துவருகின்றேன். எந்த சமூகத்திற்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டினையும் நான் செய்ததில்லை.

வீடமைப்பு திட்ங்கள் மின்சார வசதிகள் பாதை புணரமைப்புக்கள் கல்வி சார் நடவடிக்கைகள் நியமணங்கள் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் நேர்மைத் தன்மையுடன் அமைச்சருக்கு உதவியாக செயற்பட்டுவருகின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெரும் ஆளும் கட்சியில் எமது பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்படுவதன் மூலம் தான் வடமாகாண சபையில் இம்மாவட்ட மக்களது குரலாக அவற்றை அங்கு ஒலிக்கச் செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் றிப்கான்; பதியுதீன் இங்கு கூறினார்.

7 comments:

  1. உங்களின் அண்ணர்தான் மத்திய அரசில் அமைச்சராக இருக்கின்றார். அவர் மூலம் வன்னிக்குத் தேவையான அபிவிருத்திகளைச் செய்யலாம். இது வரை அப்படித்தான் செய்து வந்துள்ளதாகவும் மேடைக்கு மேடை ஒப்பாரி வைத்துச் சொல்கிறீர்கள்.

    இந்த நிலையில் நீங்கள் பெருந்தன்மையுடன் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புடன் தேர்தலில் இருந்து விலகிக் கொண்டால் என்ன?

    எல்லோருக்கும் பதவி ஆசை என்றால் எப்படி? சமூகம் சீரழியத்தான் செய்யும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. திருவாளர் புவி! இதுவரை நீங்கள் பதிவிடும் எல்லா பதிவுகளும்,கருத்துக்களும் நன்றாகவே இருந்துள்ளது. நிறையவே மனதளவில் பாராட்டுக்களையும் பெற்றுவந்துள்ளது. ஆனால் கையில் கணணியும், இனைய இணைப்பும் இருக்கின்றது என்று எல்லா விடயங்களையும் விமர்சிக்க புறப்பட வேண்டாம். நான் லண்டனில் வாழ்ந்தாலும்.மேலே இந்த சகோதரர் குறிப்பிடும் எல்லா துன்பங்களையும் கடந்த 23 வருடங்களுக்கு மேலாக அனுபவித்தவன் தான்.உணவு. உடை, கல்வி சுகாதாரம், அடிப்படைத் தேவைகள்,என எமது வடமாகாண மக்கள் இது வரை காலமும் எந்த அபிவிருத்திகளும் இன்றி இன்னுமே அகதி முகாம்களில் அவதிப்படுவது காத்தான்குடியில் பேரிச்சம் பழம் பறித்து சாப்பிடும் உங்களுக்கு தெரிந்துதிருக்க வாய்ப்பில்லை. நீங்கள் பலதடவை உங்களின் அரசியல் ஆதரவை வெளிப்படையாகவே PMMG க்கு தெரிவித்துள்ளீர்கள்.நல்ல விடயம், அது உங்களின் தனைப்பாட்ட விடயம். தற்போது நாட்டில் நிலவும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் நோக்கும் போது அரசாங்கத்திற்கான ஆதரவினை முஸ்லிம்கள் மீள பரிசீலனை செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனாலும் இந்த தேர்தலை நோக்கும் போது இதன் மூலம் பெரிதாக எதுவுமே செய்ய முடியாது. சாதாரணமாக சிந்திக்கக் கூடிய எந்த ஒரு பொதுமகனுக்கும் இது புரியும். மத்திய அரசு செய்ய நினைப்பதை எவ்வாறாவது செய்து முடிப்பார்கள். மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் இதற்கு முடிவு கிடைக்கும். வாடா மாகாணத்தை பொருத்தவரை எம் மக்கள் படும் துயரங்களை மன்னார் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்களிடம் தான் கேட்க வேண்டும். இந்த சகோதர் குறிப்பிடுவது போல இன்னுமொரு இடம் பெயர்விற்கு இந்த மக்கள் தயாரான நிலையில் இல்லை. நீங்கள் தயார் என்றால் உங்களோடு இது தொடர்பில், உங்கள் வடமாகாண அரசியல் ஆதரவு தொடர்பில்,PMMG, TNA கூட்டு தொடர்பில் சில ஆரோக்கயமான கருத்துப் பரிமாறலுக்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.உங்களின் உண்மையான அடையாளத்துடன் FACE BOOK வாருங்கள்.நல்ல பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும். கத்தான் குடியில் அரசியல் செய்யும் பல அரசியல் முனாபிக்குகளை முடியும் என்றால் உங்களின் எழுத்து திறமையால் திருத்துவதற்கு முயற்சியுங்கள்.மாறாக PMMG ல் பதவி ஆசை முற்றி செய்வது தெரியாது பல அமைப்புக்களை ஆரம்பித்து எதுவுமே கைகூடாத நிலையில் கடைசியில் PMMG ல் தஞ்ச்சம் புகுந்துள்ள பலருக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் சாதரண அகதி வாழ்வு வாழும் மக்களின் அரசியல் நிலைமைகளை திரிசங்கு நிலைக்கு தள்ளிவிட வேண்டாம்.

    ReplyDelete
  3. றிப்கானின் கோரிக்கை மிகவும் நியாயமானது. இப்படியான ஒரு கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸிடம் விடுப்பதற்கு நானே ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.வட மாகாணத்தைப் பொருத்தவரை தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகி, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, 23 வருடங்களாக அகதி வாழ்விற்குள் நொந்து நூலாகி-வெந்து கரியாகிக் கிடக்கும் வட மாகாண முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இத் தருணத்தில் அமையும்.

    யார் மீதோ கொண்ட தனிப்பட்ட கோபத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீது திணிப்பதற்கு 'வார உரைகல்' முற்பட்டிருக்கிறார் என்பது எனது அபிப்பிராயம். அதை விடுத்து, வட மாகாண முஸ்லிம் மக்களின் இன்றைய நிலைமையை யதார்த்தத்துடன் அணுக வேண்டும்.

    வட மாகாண முஸ்லிம்களுக்கென்று இப்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுவது, அவர்களின் இருண்டு போன வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சம். அந்த இருட்டு வாழ்க்கையிலிருந்து வெளியேறி ஓரளவாவது வெளிச்சத்தைக் கண்ட பின்புதான், தமது அரசியல் உரிமைகளைப் பற்றியோ-ஏனைய உரிமைகளைப் பற்றியோ அவர்களால் சிந்திக்கத் தொடங்க முடியும்.

    இந்த வெளிச்சத்தை ஆளும் கட்சியினால்- அல்லது ஆளும் கட்சியுடன் இணைந்து தமது மக்களின் விடிவுக்காகப் போராடும் ரிசாத் பதியுதீனின் கட்சியினால் மட்டுமே வழங்க முடியும்.

    வட மாகாண முஸ்லிம்களினால் காலம் காலமாக ஆராதிக்கப் பட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் அம் மக்களுக்கு, இந்த 23 வருடங்களாக எந்தவித காத்திரமான உதவிகளோ, குறிப்பிடத்தக்க சேவைகளோ, சொல்லக் கூடியளவுக்கு அபிவிருத்திகளோ வழங்க முடியவில்லை. மாறாக, காலத்துக்குக் காலம் வன்னி முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டு ஒன்றோ, இரண்டோ பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கி வந்திருக்கின்றனர்.

    ரிசாத் பதியுதீனின் வருகையின் பின்னர்தான் வட மாகாண முஸ்லிகள் ஆறுதலையும் பாதுகாப்பையும் சேவைகளையும் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க ஆரம்பித்தார்கள். அரச எதிர்ப்புக் காட்டி( அது எந்த அரசாக இருந்தாலும்) வீராப்புப் பேசுவதற்கு கிழக்கு மாகாணம் போல் வடக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த களமல்ல என்பதை வடக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    வட மாகாணத்தில்-சிறப்பாக வன்னி மாவட்டத்தில் ரிசாத் பதியுதீனுக்கு இருக்கும் நற் பெயரும்- செல்வாக்கும் உலகமறிந்த விடயம். அதனைத் தகர்த்து, அரசாங்கத்திடம் அவருக்குள்ள செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்பதுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது வகுத்துள்ள சதி வியூகம். அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு, வட மாகாண முஸ்லிம்களைப் பலி கொடுக்கும் கைங்கரியத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

    இந்த சதிக்கு வட மாகாண முஸ்லிம்கள் பலியாகி விடக் கூடாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், வட மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு அளிக்கும் வாக்குகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே, எதிர்வரும் 21ம் திகதி தத்தமது மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு தமது எதிர்கால சுபீட்ச வாழ்வைத் தீர்மானிக்கும் வாக்குகளை வட மாகாண முஸ்லிம்கள் அள்ளி வழங்க வேண்டும்.

    மன்னார் மாவட்டத்தில் ரிப்கான் பதியுதீனின் தலைமையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் மில்ஹான் லதீப்,அலிகான் ஷரீப், அமீன் போன்ற அனைத்து வேட்பாளர்களும் சமூக நோக்கமுடைய சிறந்த வேட்பாளர்களே. தலைமை வேட்பாளர் ரிப்கான் பதியுதீனுக்கு தமது வாக்கை அளிப்பதோடு, ஏனைய தமக்குப் பிடித்தமான முஸ்லிம் வாக்காளர்களுக்கும் விருப்பு வாக்குகளை அளித்து மூன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களையாவது வட மாகாண சபையில் உறுதிப்படுத்த வேண்டும்.

    வரலாற்றில், வடக்குக்கென்று தனியாக நடக்கும் இந்தத் தேர்தலில், வட மாகாண முஸ்லிம்களின் வருங்காலம் தங்கியுள்ளது. எனவே, வெற்றிபெறும் நிலைமையில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை மேலும் அமோக வெற்றி பெறச் செய்து, தமது எதிர் காலத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. உயர்திருவாளர் மொஹமட் Ismath பாவா நபீல் அவர்களே..!

    மேற்கண்ட செய்திக்கு எனது கருத்தைப் பதிவு செய்துள்ளேனே தவிர உங்களை வம்புக்கு இழுத்து வாதாட வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

    நீங்களும் அச்செய்தி தொடர்பாக உங்கள் கருத்தை பதிவு செய்யலாம் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது.

    நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜப்னா முஸ்லிம் ஒரு பொதுத்தளம். அது யாருடைய சொந்தத் தளமுமல்ல. எனவே ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே தவிர வாசகர்களை ஆளுக்காள் இழுத்து விவாத மேடை நடாத்துவதற்காக இத்தளத்ததை உரியவர்களும் தோற்றுவிக்கவில்லை. நாமும் அவ்விதமாகப் பயன்படுத்த நினைக்கவில்லை.

    கையில் கணனியும்இணைய இணைப்பும் உங்களிடமும்தான் இருக்கிறது. அதற்காக எனது கருத்துக்கு பதில் கூற வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. செய்திக்கு உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.

    வட மாகாண அமைச்சராக றிசாத் பதியுத்தீன் இத்தனை ஆண்டுகளாக இருக்கும் நிலையில் இன்னமும் வட மாகாண மக்கள் அகதி முகாம்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அமைச்சர் என்ன இத்தனை ஆண்டுகளாக செய்து கொண்டிருந்தார் என்பதைக் கேளுங்கள். அதைத்தான் நாமும் கேட்கின்றோம்.

    நீங்கள் பி.எம்.ஜீ.ஜீயுடன் கருத்துப்பரிமாற விரும்பினால் அவர்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் அதற்கு இடைத்தரகராகப் பணியாற்ற நான் விரும்பவில்லை. அதற்காக நான் ஏன் பேஸ்புக்கில் உங்களிடம் வரவேண்டும்? சண்டை பிடிக்கவா?

    "புவி றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி" என்றால் அது இந்த இலங்கையிலேயே நான் ஒருவன்தான். இதைத்தவிர உண்மையான அடையாளம், போலி அடையாளம் என்றெல்லாம் என்னிடம் எதுவும் இல்லை.

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அணியில் இணைந்திருந்து ஹறாமான முறைகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் ஹிஸ்புல்லா நாட்டியுள்ள பேரீச்சம் மரத்தில் பழம் பறித்துத் தின்னும் அளவுக்கு நான் மானம் ரோஷம் கெட்டவன் அல்ல.

    அதற்கு காத்தான்குடியில் பெரிய ஹஸரத் உட்பட ஏரானளமான உலமாக்களும், ஜால்ரா அடிக்கும் கும்பல்களும் இருக்கின்றன. நான் கடையில் சொந்தப் பணம் கொடுத்துத்தான் இன்று வரை பேரீத்தம்பழம் சாப்பிட்ட வருகின்றவன்.

    அரசாங்கமும், அரசாங்கத்தில் கொந்தராத்துகளுக்காக தஞ்சம் அடைந்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளும்தான் வட மாகாண முஸ்லிம்களை மாத்திரமல்ல, முழு இலங்கை முஸ்லிம்களையுமே திரிசங்கு நிலைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் மிகத் தெளிவாகவே இருக்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    (குறிப்பு: ஜப்னா முஸ்லிம் இணையதள நிர்வாகிகளுக்கு! தயவு செய்து எனது இந்த பதில் கருத்தையும் முழுமையாகப் பிரசுரித்து ஊடக தர்மத்தைப் பேணுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்)



    ReplyDelete
  5. குடும்ப ஆட்சியா மக்கள் ஆட்சியா மக்கள் தீர்மாணிக்கட்டும் .

    ReplyDelete
  6. சகோதரர் S. ஹமீத் அவர்களுக்கு,

    நான் யார்மீதும் கொண்ட கோபத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீது திணிப்பதற்கு முயலவில்லை. உங்களின் அபிப்பிராயம் தவறானது.

    நேரடியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸை நான் எதிர்க்கின்றவன். அதனால் அக்கட்சியின் உப தலைவர் அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் குண்டர்களால் நேரடியாகப் பல தடவை தாக்கப்பட்டவன். இவ்வாறான தாக்குதல்களால் அவர்களின் தாக்குதல்கள் குறித்து அச்சம் தீர்ந்தவன்.

    வட மகாணமோ, கிழக்கு மாகாணமோ எந்த மாகாணத்திலும் முஸ்லிம்களின் இன்றைய நிலவரம் இதுதான். பேரின அரசாங்கத்தின் கைக்கூலிகளாக எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் இருப்பதனால்தான் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மதவழிபாடுகள், சுதந்திர நடமாட்டம், வர்த்தக மேம்பாடு, வாழ்வாதாரங்கள் எல்லாம் பின்தள்ளப்பட்டுள்ளன.

    ஆங்காங்கே ஒரு சில அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றில் கணிசமான தொகைகளை நமது அரசியல்வாதிகளே கொமிஷன்களாகவும் உறிஞ்சிக் கொள்கின்றனர்.

    உதாரணத்திற்கு, அ.இ.ம.காங்கிரஸின் ஆளுகையிலுள்ள எமது காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூலிக்கு வண்டியோட்டியவர். அவர் இந்தக் கட்சியில் இணைந்து நகர சபைகத் தவிசாளராகியதன் பின் ஐந்து இலட்சம் ருபா நன்கொடை கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளார். 3வது முறையாகவும் நேற்று முன் தினம் மக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.

    அவரது நிர்வாகத்தில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதை நான் பகிரங்கமாக நீங்கள் பெயர் குறிப்பிட்ட ஊடகம் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பகிரங்கப்படுத்தியுள்ளேன். எந்தவொரு விசாரணையும் உங்களின் கட்சித் தலைமையால் இதுவரை எடுக்கப்படவில்லை.

    மேலும், உங்களின் கட்சி உறுப்பினரான எமது நகர சபை உறுப்பினர் அவரிடம் கல்வி பயில வந்த மாணவியைக் காரில் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்தார். அனால் அவர்மீது விசாரணை நடாத்திய குழுவின் தலைவர் கி.மா. சபை உறுப்பினர் அப்துல் பாறூக் மொஹமட் சிப்லி, அவர் குற்றமேதும் செய்யவில்லை என மத்திய குழு கருதுவதாகத் தெரிவித்து அவரை நகர சபை உறுப்பினர் பதவியில் இன்று வரை நீடிக்கச் செய்துள்ளார்.

    உங்களது கட்சியால் மாகாண சபை வேட்பாளராக நியமிக்கப்பட்ட அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லியின் வாப்பாவின் பெயர் முகம்மது பாறூக். 1,2,3 என்ற விருப்பு இலக்கங்களைப் பெறுவதற்காக பெற்ற தகப்பனின் பெயரையே மாற்றி மோசடி செய்துள்ளார்.

    இப்படி என்னால் இக்கட்சியின் அரசியல் தலைமைகள் செய்துள்ள குற்றவியல் சம்பவங்களைப் பட்டியல் இட முடியும்.

    எனவே நான் உண்மையிலேயே இக்கட்சிக்கு எதிரானவன் என்பதை மூடி மறைக்காமல் பகிரங்கமாகவே உங்களுக்கும், உங்களைப் பேன்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  7. மத்திய அரசில் தமையன் இருக்கும்போது மாகாணசபைக்கு வேறு திறமை வாய்ந்த ஒருவரை நிறுத்தி இருக்கலாம் இங்கும் குடும்ப ஆட்சி தேவையா என்பதை மன்னார் முஸ்லிம்கள் ஒரு தடவைக்கு மேல் சிந்தியுங்கள் வடக்கில் ஆளும் கட்சியாக கூடமைப்பிட்கே அதிக வாய் ப பிருக்கின்றது அவர்களுடம் சேர்ந்து ஆளும் கட்சியாக இருப்பதற்கு முஸ்லிம் காங்கரஸ் உறுப்பினர் ஒருவருக்கு சந்தர்ப்பம் உள்ளது .மன்னார் கலநிலவரமும் அப்படியே உள்ளது ,மன்னார் முஸ்லிம்களே மீண்டும் சிந்த்யுங்கள் நாம் ஆளும் கட்சியா அல்லது எதிர்கட்சியா என்பதை , - did not return any Directory search results

    ReplyDelete

Powered by Blogger.