Header Ads



கல்முனையில் சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள்

(அப்துல் அஸீஸ்)

இன்று அனுஸ்டிக்கப்படும் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசசெயலக சமுர்த்தி சமூக அபிவிருதத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் நேற்று கல்முனை பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 62பாடசாலை மாணவர்களுக்கு இப்பிரதேச தனவந்தர்களின் உதவியுடன் 'சிசுத்திரிய' புலமைப்பரிசில் வழங்கப்பட்டதுடன், தேவையுடைய மாணவர்களுக்கு சப்பாத்துக்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களில் கல்முனைப் பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல் உட்பட சமுர்த்தி முகாமையாளர்களான எஸ்.எஸ்.பரீரா, எம்.எம்.முபீன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.