முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஆளும் கட்சிக்கு பல்டி அடிப்பு
(மொஹொமட் ஆஸிக்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளர் எம்.எம்.வஹாப்தீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இனைந்து கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளர் எம்.எம்.வஹாப்தீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இனைந்து கொண்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இனைந்து கொண்டுள்ள போதும் மத்திய மாகாணத்தில் தனித்தே போட்டியிடுகிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் எம்.எம். வஹாப்தீன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் மேடைகளில் ஏரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இம் முறை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரான எம்.எம். வஹாப்தீன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அக்குறணை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் முன்னால் அங்கத்தவருமாவார்.
தலைவர் ஹக்கீமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் அங்கத்தவர் தானே.. இதில் என்ன பிழை இருக்கிறது. தலைவரே பால்டி அடிக்கும் போது.... பின்னால் இருப்பவர்கள் நடந்தே போகாலாமே....??
ReplyDelete