அக்கரைப்பற்று மாநாகர பிரதான வீதியில் உள்ள நடைபாதை ஒழுங்குபடுத்தப்படவுள்ளது
(கே. சீ. எம். அஸ்ஹர்)
அக்கரைப்பற்று மாநாகர சபைக்குட்பட்ட நகர வீதியோரங்களில் உள்ள பயணிகள் நடைபாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வியாபார பெருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தமையால் பயணிகள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.இதனை கருத்தில் கொண்டு பாதையோர நடைபாதையை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை அக்கரைப்பற்று பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன் அவர்களின் ஆலோசனைக்கு இணங்க நடைமுறைப்படுத்தப்படுகிறது. வியாபாரிகளை அறிவுறுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.பொலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி நடைபாதையைத் தடைசெய்வோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கபபடவுள்ளது.
Post a Comment