'மாமனிதர் அஷ்ரப் நினைவுதின நிகழ்வு' - புத்தளத்தில் பிரதான நிகழ்வு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அகால மரணமடைந்த தினமான செப்டெம்பர் 14 ஆம் திகதியை குறிக்கும் 'மாமனிதர் அஷ்ரப் நினைவுதின நிகழ்வு' வைபவம் அவர் அகால விபத்துக்குள்ளான செப்டெம்பர் 14ஆம் திகதி புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர்களினாலும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்ட இவ் வைபவம் புத்தளம் நகர மண்டபத்தில் நிகழ்த்துவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு இவ் வைபவம் ஆரம்பமாகவுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி தனித்துவத்தை நிலைநிறுத்தி சிறுபான்மையினத்தின் ஒன்றுபட்ட பலத்தை நிரூபித்துக்காட்டிய மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்படவுள்ள இந்நினைவு தின நிகழ்வில் கட்சி, இன, மத வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
இங்கேயும் மரத்துக்கு வாக்களிக்குமாறு பேச்சாளர்கள் எவரும் கேட்காமலிருந்தால் நல்லது!
ReplyDeleteஏனெனில் மு.கா. தாபகத் தலைவரின் நினைவு தின விழாவில் ரிசாத், அதா போன்றவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கலந்து கொள்ளக்கூடும்.
'மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் அரசியலின் ஆணி வேர் அல்லவா?'
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
unmail ma manithar ashraf avarhalai ponru ippothulla arasiyal vathihal illa
ReplyDelete