தாய்ப்பாலுக்கு நிகராக ஏனைய பால்மாக்கள் - மருத்துவ சங்கம் குற்றம் சுமத்துகிறது
தாய்ப்பாலுக்கு நிகராக ஏனைய பால்மா வகைகளை விளம்பரப்படுத்தக் கூடாதென்று இலங்கையில் சட்டமிருந்தும் மறைமுகமாக பல நிறுவனங்கள் தாய்ப்பாலுக்கு நிகரான பால் என்று விளம்பரப்படுத்தி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
உலகத்தில் தாய்ப்பாலுக்கு நிகரானது எதுவும் இல்லையென்று ஆய்வின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார். சுகாதார அமைச்சின் உணவு குழு வலுவிழந்து செயற்படுவதனால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அக்குழுவினுள் சட்ட வல்லுனர்களை உள்ளடக்கி செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உலகத்தில் தாய்ப்பாலுக்கு நிகரானது எதுவும் இல்லையென்று ஆய்வின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்தார். சுகாதார அமைச்சின் உணவு குழு வலுவிழந்து செயற்படுவதனால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அக்குழுவினுள் சட்ட வல்லுனர்களை உள்ளடக்கி செயற்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் பால் மா வகைகளில் டிசிடி எனப்படும் இரசாயன பதார்த்தம் காணப்படுவதாக எழுந்த பிரச்சினையோடு தாய்மார்களுக்கு எழுந்த மற்றுமொரு பிரச்சினை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்குப் பிறகு என்ன கொடுப்பது என்பதுதான்.
முதலில் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி , புத்தி, கல்வியறிவு, சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் திறன் என்பன தாய்ப்பால் குடிப்பதனால் மட்டுமே அதிகமாக பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் தாய் மார்பகப் புற்று நோய் , கருப்பைப் புற்று நோய் , எலும்பு தொடர்பில் எழும் பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாப்பு பெற முடியும்.
குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து சத்துள்ள கஞ்சி , உணவு வகைகளைக் கொடுக்க முடியும். நாம் உட்கொள்ளும் உணவுகளையும் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை இரண்டு வயதை எட்டும் வரையில் தாய்பால் கொடுப்பது சிறந்தது.
சாதாரணமான செயற்பாடு இதுவே. ஆனால் தற்போது போலியான விளம்பரங்களை நம்பி தாய்மார்கள் பால்மா வகைகள் சிறந்தது என்று அதனைக் கொடுத்து வருகின்றனர். தாய்ப்பாலை விட பால்மா வகைகள் சிறந்தவை என்ற தவறான அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். விளம்பரங்களில் காட்டும் பால் மா வகைகளை வாங்கிக் கொடுக்காவிட்டால் தங்களின் பிள்ளைகள் குறைபாட்டுடன் வளர்ந்து விடுவார்களோ என்று அச்சப்படுகின்றனர்.
தாய்ப்பாலில் மட்டுமே குழந்தைக்கு தேவையான அனைத்து போசணைகளும் உள்ளடங்கியுள்ளன. குழந்தைகளுக்கு போல தாய்மார்களுக்குத் ÷ தவையான அயன் , போலிக் அசிட் , கல்சியம் என்பவற்றை சுகாதார அமைச்சு கொடுத்து வருகின்றது. தேவையானவற்றை கொடுத்து வருவதால் போலியான விளம்பரங்களை நம்பி பால்மா வகைகளை வாங்கிக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தாய்ப்பால் கொடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் சுகாதார அமைச்சிடம் இருக்கின்றபோதும் முறையாக செயற்படுத்தாமையினால் இன்று இவ்வாறான பிரச்சினைகள் எழுந்துள்ளன. பெரும்பாலான வைத்தியசாலைகளில் தாய்ப்பால் வங்கி இருக்கின்றபோதும் அதனூடாக தாய்மார்கள் பெறும் பயன்கள் குறைவு.
எளவே சுகாதார அமைச்சின்ஊடாகவே தாய்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்திரமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதற்கான ஆலோசனைகளை எமது சங்கம் வழங்கி உள்ளது என்றார்.
Post a Comment