Header Ads



இஹ்வானுல் முஸ்லிமின் சட்டத்திற்குப் புறம்பாக செயற்படுகிறது - நீதிபதிகள் பரிந்துரை

எகிப்து நாட்டின் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி அந்நாட்டின் ராணுவத்தினரால் பதவி இறக்கம் செய்யப்பட்டார்.அதுமுதல் அந்நாட்டில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. கைது செய்யப்பட்ட மோர்சி ஒரு மறைவான இடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி அவரது இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எகிப்து அரசியலிலும், மோர்சிக்கு ஆதரவாகவும் ஒரு முக்கிய சக்தியாக இந்தப் பிரிவு செயல்பட்டு வருகின்றது.  

நேற்று, திங்களன்று எகிப்தில் கூடிய நீதிபதிகள் குழு .இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைக் கலைக்குமாறு நீதிமன்ற நிர்வாக அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக சகோதரத்துவ அமைப்பு செயல்பட்டு வருவதாக நீதிபதிகள் குழு குற்றம் சாட்டியுள்ளது. அதன் கெய்ரோ தலைமையகத்தையும் மூடுமாறு அறிவுறுத்தியுள்ளது

ஆயினும், தனது அடுத்த விசாரணையை நவம்பர் மாதம் 12ஆம் தேதி வைத்திருக்கும் நீதிமன்ற அமைப்பினை இந்தப் பரிந்துரை கட்டுப்படுத்தாது.அதிபரின் பதவியிறக்கத்திற்குப் பின்னர் ராணுவம் படிப்படியாக இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினை ஒடுக்கும் நடைமுறையைத் தீவிரப்படுத்தி வருகின்றது.

இந்த அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் மோர்சி மீதே அவரது அரசியல் எதிரிகளைக் கொன்றதாக ஞாயிறன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீதான விசாரணைக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை..அவரது வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த முக்கியமான தலைவர்கள் 14 பேரும் விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது.

No comments

Powered by Blogger.