Header Ads



மம்மூத் எனப்படும் மிகப்பெரிய பனியுக யானைகள் காலநிலை மாற்றத்தாலே இறந்தன..!

மம்மூத் எனப்படும் நீண்ட ரோமங்களுடனும், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடனும் கம்பீரமான யானைகள் பனியுக காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்தன. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிகமான அளவில் வாழ்ந்த இந்தவகை மம்மூத்துகள் மதனிர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டன என்று நம்பப்பட்டு வருகின்றன.

ஆனால், இதுகுறித்த டி.என்.ஏ. ஆராய்ச்சிகள் மம்மூத் வகை யானைகள் இனம் இறந்ததற்கு காரணம் காலநிலை மாறுதலே என்று கூறியுள்ளது. பனியுக காலத்தில் வாழ்ந்த இந்த இனம் பூமி வெப்பமடைந்தபோது இறந்து இருக்கலாம் என்று அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த மம்மூத்துகளின் இனப்பெருக்கம், இடம்பெயர்தல், அழிவுகள் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் சுவீடனில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மம்மூத்துகள் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போயிருக்கலாம் என்றும் ஒரு பிரிவினரும், 30 ஆயிரம் ஆண்டுகளாகியிருக்கலாம் என்று மற்றொரு பிரிவு ஆராய்ச்சியாளர்களும் நம்புகின்றனர்.

No comments

Powered by Blogger.