வாக்களிப்பில் அசமந்தமாக இருக்க வேண்டாம் - முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை
வாக்குரிமை எமது பிறப்புரிமை. அதனை முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சனிக்கிழமை நடைபெறும் மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு, முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மூன்று மாகாணங்களிலும் வாழும் முஸ்லிம் வாக்காளர்கள் தமக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். தாம் விரும்பிய கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. அதனை சரியாகச் சிந்தித்து பயன்படுத்தமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த காலப் புள்ளிவிபரங்களின்படி முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் பல இழப்புகளைச் சமூகம் எதிர்கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகிறோம். இதேநேரம் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கத்தின் போது உணர்த்துமாறு மூன்று மாகாணங்களிலும் உள்ள பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் நம்பிக்கையாளர்களையும் வேண்டுகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment