Header Ads



இலங்கை ஆசியாவின் போதைப் பொருள் ஆச்சரியமாக உருவாகும்- ரணில்

இலங்கை போதைப் பொருள் இராச்சியமாக மாற்றமடைந்துள்ளது. விரைவில் ஆசியாவின் போதைப் பொருள் ஆச்சரியமாக உருவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டி யட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சிறு பொதிகளில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் தற்போது கொள்கலன்களில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகளவான ஹெரோயின் இலங்கையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலின் ஊடாக அந்த மாற்றத்தை ஆரம்பிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நிச்சயமாக நடக்கும் இன்சாஹ் அல்லாஹ் நானும் காத்திருக்கிறேன் உங்களுக்கு வெற்றி வரட்டும், இன்ச்சாஹ் அல்லாஹ் நானும் நிச்சயம் உங்களுக்கு வோட்ஸ் போடுவேன் எனக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.