புத்தளத்தில் வாக்குச் சீட்டுகள் மீட்பு - தேர்தல்கள் ஆணையாளருக்கு ஐ.தே.க. கடிதம்
புத்தளம் புனித அன்ருஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் இருந்து பாரிய தொகை வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டமை பற்றி பாரிய சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு அறிக்கை பெறப்படும் வரை புத்தளம் மாவட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு விபரங்களை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. குறித்த வாக்குச் சீட்டுகள் எண்ணுவதற்காக எடுக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்தும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜே.வி.பியின் புத்தளம் மாவட்ட குழுத்தலைவர் சமந்த கோரலே ஆராச்சியும், இந்த சம்பவம் தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் இந்த பிரச்சினை குறித்து தலையிட்டு துரித தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

Post a Comment