இதயத்துடிப்பின் அதிர்வால் கம்ப்யூட்டரை இயக்கும் "ரிஸ்ட் பேண்ட்'
இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால், மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்கும் கருவி, கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று, இதயத் துடிப்பின் வேகம் மற்றும் அதிர்வுகள் வேறுபட்டவை. மணிக்கட்டில் கட்டும், "ரிஸ்ட் பேண்ட்' வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி, "நைமி ரிஸ்ட் பேண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில், இதயத் துடிப்பின் அதிர்வை அறிய, "வோல்ட் மீட்டர்' மற்றும் "ஹார்ட் ஐடி' பொருத்தப்பட்டுள்ளது. கனடாவின், "பயோனிம்' நிறுவனம், இக்கருவியின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதைக் கொண்டு, காரைத் திறப்பது, "ஆன்-லைன் ஷாப்பிங்'கில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும். இக்கருவியால், மொபைல் போன், கம்ப்யூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் கருவிகளின், "பாஸ் வேர்டு' ஆகவும் பயன்படுத்தலாம். இதை அணிந்திருப்பவர், மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்-டாப் அருகில் சென்றால், அவை தானாக இயங்கத் துவங்கும்; "ஸ்மார்ட் டிவி'யை, இயக்கவும், நிறுத்தவும் முடியும்.
Post a Comment