Header Ads



போரை தவிர்க்க சிரியாவுக்கு அமெரிக்கா புது நிபந்தனை..?

"ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை காட்டினால், சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம்' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

"சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல், 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந்நாட்டில் படக்கூடாது' என, அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் நடந்த, "ஜி 20' உச்சி மாநாட்டில், ""சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது,'' என, ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, சிரியா மீது, 72 மணி நேர தாக்குதலை நடத்த, அமெரிக்க தலைமையகமான, "பெண்டகன்' திட்டமிட்டு உள்ளது.சிரியா மீதான தாக்குதலால், அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக, ரஷ்யா, பன்னாட்டு அணுசக்தி முகமையக கூட்டத்தில், நேற்று தெரிவித்தது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி குறிப்பிடுகையில், ""சிரியா தன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை; அதை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில், அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும்,'' என்றார்.சிரியாவின், உள்நாட்டு சண்டையில், "இந்திய முஸ்லிம்கள் பலர் ஈடுபட்டுள்ளதாக, இந்தியாவுக்கான சிரியா தூதர் ரியாத் அபாஸ் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் ரியாத் அபாசை நேற்று அழைத்து, அவருக்கு கண்டன நோட்டீஸ் அளித்தது.

அப்போது அபாஸ் குறிப்பிடுகையில், ""நான் இந்திய ஜிகாத்துகளை பற்றி குறிப்பிடவில்லை. துருக்கியிலிருந்து வந்த ஜிகாத்துகளை பற்றி தான் சொன்னேன். சிரியாவுக்கு, இந்தியா நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது,'' என்றார்.

1 comment:

Powered by Blogger.