பிரதமர் பதவி பவித்ரா வண்ணியராச்சிக்கு..? சிங்கள ஊடகம் தகவல்
(அஸ்ரப் ஏ சமத்)
மத்திய, வயம்ப, வடக்கு மாகாணங்களின் தேர்தல்கள் முடிந்த உடன் அமைச்சரவை மாற்றமொன்றை நடைபெறவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம் மாற்றத்தின்போது பிரதம மந்திரி பதவி பவித்ரா வண்ணியராச்சிக்கு வழங்கப்பட உள்ளது.
இம்மாற்றத்தின் நோக்கம் கொழும்பில் நடைபெறவுள்ள பொது ராஜமண்டல கூட்டத்தொடரை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கான வரவேற்பு ஒழுங்குகளை செய்யும் முகமாக உடனடியாக மிகவும் ஆற்றல் உள்ள வேலைசெய்யக் கூடிய பிரதம மந்திரி தேவைப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரவிக்கின்றன என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது.
பிரதமர் பதவி மின்சக்தி அமைச்சராக இருக்கும் பவித்தரா வண்னியாராச்சிக்கு வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரம் இல்லாத பதவி யாருக்குக் கொடுத்தால்தான் என்ன? இப்போதுள்ள பிரதமரின் பெயர் கூட இலங்கையின் பலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்..... ஆனால் பசில் நாமல் கோதாபய என்ற பெயர்களைச் சொன்னால் சிறுபிள்ளையும் அவர்கள் யாரென்று உடன் பதில் சொல்லும்.
ReplyDeleteஇந்த அடிப்படையில் இந்த பிரதமர் பதவிக்கு எமது 'மான்புமிகு' அமைச்சர்களில் ஒருவருக்கு கொடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
நமது மண்ணின் மைந்தன் அரையமைச்சர் ஹிஸ்புல்லா, நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், வன்னிராசா றிசாத் போன்றவர்களுக்கும் ஏதும் மாற்றங்கள் நிகழுமோ..................????????????!
ReplyDeleteதமது அமைச்சுக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தானே அவர்களும் இப்போது களத்தில் இராப்பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-