Header Ads



சவூதி அரேபியாவில் இலங்கையை ஒரு சுற்றுல்லா மையமாக பிரபல்யப்படுத்தும் முயற்சி

(Tm) சவூதி அரேபியாவில் இலங்கையை ஒரு சுற்றுல்லா மையமாக பிரபல்யப்படுத்தும் முயற்சியில் றியாத்திலுள்ள இலங்கை தூதரகம் ஈடுபட்டுள்ளது என இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் 19,500 சவூதி சுற்றுலா பயணிகள் இலங்கை வருகின்றனர். இதை மூன்று வருடத்தில் இரட்டிப்பாக்க இலங்கை திட்டமிட்டுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

றியாத்திலுள்ள பைஸலியா ஹோட்டேலில் நடபெற்ற இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டுக்கு சமாந்தரமாக ஒரு சுற்றுலா கண்காட்சியும் இடம்பெற்றது. இதில் 15க்கு மேற்பட்ட இலங்கை பயண முகவர்களும் ஹோட்டேல்களும் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தின.

3 comments:

  1. ஐயா வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவர்களே ரியாத்தில் இருந்து தூர இடங்களில் உள்ள இலங்கையர்கள் அவசரநிமிர்த்தம் ரியாத் இலங்கை தூதரகத்துக்கு போனடிச்சா ஒண்ணுக்கும் ஆன்சர் பன்னமாட்டங்கிராங்களே.
    மொதல்ல அத சரிபண்ண பாருங்கோ உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

    ReplyDelete
  2. Please inform HALAL not available in Srilanka how they can find Halal also

    ReplyDelete

Powered by Blogger.