சம்மாந்துறையில் சிவில் பாதுகாப்பு மீளாய்வு கருத்தரங்கு
(யு.கே.காலித்தீன்)
ஆசியா பௌன்டேசன் அனுசரனையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு மீளாய்வு கருத்தரங்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுக்காப்பு குழுக்களின் எதிர்கால நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் எனும் தொனிப்பொருளில் மீளாய்வு கருத்தரங்கு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராகவும் விருந்தினராகவும் வருகை தந்த அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் பிரிவின் பதில் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான அஜீத் ரோகன கலந்து சிறப்பித்த்தோடு அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஸாந்த சந்திரசேன, கல்முனை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், சம்மாந்துறை பதில் நிலைய பொறுப்பதிகாரி யு.ஏ. பத்ம ஸ்ரீ சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ. சம்சுடீன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எம். கரன் ஆகியோரோடு கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் செயலாளர் உட்பட இஸ்லாமிய, பௌத்த, இந்து மதங்களின் போதகர்களுடன் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment