ஜனாதிபதி நாடு திரும்பியதும் முதலமைச்சர்கள் அமைச்சர்கள் விபரம் வெளியாகும்
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்களும் அமைச்சர்களும் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள் - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்களும் அமைச்சர்களும் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத் தொடருக்காக சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கம் வகிப்பதாகவும் இதனால் மாகாண சபைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவாகியுள்ளதாகவும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களின்போது தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர்களின் விபரங்களை அறிவித்திருந்ததோடு அவ்வாறு அறிவிக்கப்படாத சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பின் தீர்மானித்திற்கு அமைய அந்த பதவிகளுக்கு உரியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர்களை தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெயரிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Nf
Post a Comment