Header Ads



ஜனாதிபதி எந்த பள்ளியையும் அவரே கட்டி, அதனை திறக்கவில்லை - முபாறக் அப்துல் மஜீத்

பள்ளி உடைப்பு பற்றி பேசுபவர்கள் ஜனாதிபதி பள்ளிவாயல்களை திறப்பது பற்றி பேசுவதில்லை என அமைச்சர் பௌசி கூறுவதன் மூலம் பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகின்றன என்பதை இப்போதாவது அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது

இது வரை இலங்கையில் 26 பள்ளிகள்  சேதமாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன. எந்தப்பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என ஜனாதிபதி கூறுகிறார். அதே போல் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் அதையே கூறுகின்றனர். எந்தப்பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என நிமல் சிறிபால பாராளுமனற்றத்தில் பேசிய போது அதனை ஹக்கீம், ரிசாத், அதாவுள்ளா உட்பட அனைத்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஆமோதித்தனர். ரணில் விகரமசிங்கவே இதனை கடுமையாக மறுத்தார்.

      தற்போது பள்ளிகள் உடைக்கப்படுவதாக கூறுவோர் ஏன் ஜனாதிபதி பள்ளிகள் திறப்பதை பேசுவதில்லை என அமைச்சர் பௌசி கேட்கிறார். ஜனாதிபதி எந்தப்பள்ளியையும் அவரே கட்டி அதனை திறக்கவில்லை. மாறாக புணருத்தாரணம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட போது பள்ளிக்கு நாடா வெட்டி திறக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் தமது சொந்த பணத்தினால் கட்டிய பள்ளிவாயல்களை சிதைத்தவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

      உண்மையில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டனவா இல்லையா என்பதை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் விசாரணை செய்விக்க முஸ்லிம் அமைச்சர்கள் முயற்சி எடுத்திருக்கலாம். அப்போதாவது இந்த உண்மைகளை அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால் மஹியங்களை பள்ளிவாயல் சம்பந்தமாக பேச நேரம் தர வேண்டும் என அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எழுதிய கடிதத்துக்கே இது வரை பதில் இல்லாத நிலையில் ஆணைக்குழு என்பது கானல் நீர்தான்.

1 comment:

  1. என்ன மஜீத் சார்..... நீங்கள் சொல்வதும் சிறுபிள்ளைத்தனமாக அல்லவா உள்ளது. 'பால் கொடுத்த பிள்ளை ஏன்தான் அழவேண்டடும்.' நீங்கள் குறிப்பிட்டுச்சொல்லிய அந்த அமைச்சர்களுக்கு என்னதான் குறை....

    தமது மக்களுக்கு நீதி தேவையில்லை ஆனால் தனக்கு நீதியமைச்சு கிடைத்தால்போதும் என்று சொல்லும் ஹக்கீம் 'முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சு தேவையில்லை ஆனால் 'தனக்கு வருடா வருடம் ஹஜ் கோட்டா கொடுத்தால் போதும்' என்று சொல்லும் பௌசி..??? முஸ்லிம்களைப்பற்றி பேசுவதற்கு எந்தப் பிரச்சினையுமுமில்லை ஆனால் 'கொள்ளுப்பிடியவில் அன்ன நடை போடும் தமிழ் பெண்களைப்பார்த்து விட்டு பாராளுமன்றத்தில் வெகு நேரம் பேசி தமிழ் பாராளுமன்ற உருப்பினர்களின் வெறுப்பை வாங்கிக்கொண்ட அஸ்வர்.... இப்படி எத்தனையோ....

    இவர்கள்தான் 'நம்ம தலைவர்கள்' இந்த நாட்டில் எம்மக்களுக்கு பிரச்சினையே இவர்கள்தான். சுருக்கமாக சொல்லப்போனால் 'அரசியலில் இது சகஜம்'..... என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.