Header Ads



ஸ்ரீசாந்த், சவானுக்கு வாழ்நாள் தடை

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு, போட்டிகளில் பங்கேற்க பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது. அமித் சிங்கிற்கு 5 ஆண்டு, சித்தார்த் திரிவேதிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோர் கடந்த மே 16ம் தேதி கைது செய்யப்பட்டனர். 

"நிழல் உலக' தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் ஆகியோருக்கும் இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் மீது "மொகோகா' எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. 

கடந்த ஜூலை 30ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் ஜாமினில் உள்ளனர். 

இதனிடையே, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், நியமிக்கப்பட்ட ரவி சவானி தனது விசாரணை அறிக்கையை, துணைத் தலைவர்கள் அருண் ஜெட்லி, நிரஞ்சன் ஷா அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் சமர்ப்பித்தார். 

இந்த குழு முன்பு, நேற்று ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சித்தார்த் திரிவேதி மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் ஆஜராகினர். தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல இவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அமித் சிங் ஆஜராகவில்லை.

No comments

Powered by Blogger.