Header Ads



கோத்தாவின் கருத்து பற்றி முஸ்லிம் சமூகம் கவலை

(Gtn) பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் முஸ்லிம் கடும் போக்குவாதம் உருவாகக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முப்பதாண்டு கால யுத்தத்தின் போது முஸ்லிம்கள் எந்தவிதமான தயக்கமுமின்றி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக இலங்கை முஸ்லிம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. எந்த காலத்திலும் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் தொடர்பில் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்தினை, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்து வரும் கடும்போக்குவாதிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு பாதுகாப்பு அமைச்சரின் கருத்தை இந்த சந்திகள் பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென தெரிவித்துள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் எந்தவிதமான கடும்போக்குவாதத்தையோ அல்லது ஆயுதப் போராட்டத்தையோ மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு தீவிரவாத சக்திகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் துணை போக மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் புலனாய்வுப் பிரிவினர் சிறந்த சேவையை ஆற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஏதேனும் அச்சுறுத்தல் காணப்பட்டால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை முஸ்லிம் பேரவை கோரியுள்ளது.

1 comment:

  1. இவன் ஒரு வம்புக்கு தான் கூறுகிறான் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படித்தான் இருந்தால் இவன் சும்மாவா விடப்போகிறான்.

    இப்படி அறிக்கைகளை விட்டுக் கொண்டு இருக்காமல் இந்த ராஜபக்ச அன் கோ களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான வேலைகளை முழு மூச்சுடன் முயற்சி செய்யுமாறு அனைத்து அமைப்புக்களையும் முஸ்லிம்களையும் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.