Header Ads



எமக்கு மத்தியில் ஏன் இந்த பிளவு..?

(M.H.நூருல் ஹசன்)

அஸ்ஸலாமு அலைக்கும்!
இஸ்லாமிய சகோதரர்களே!

இன்று நம் நாட்டில் ஏன் முழு உலகிலும் முஸ்லிம்களுக்கும் மாற்று மத சகோதரர்களுக்கும் இடையில் நல்லுறவு என்பது பெயரளவிலேயே காணப்படுகிறது, இதற்கான முதல் காரணம் எம்மை பற்றிய தவறான எண்ணங்கள் மாத்திரம் காரணம் அல்ல, இதற்கான முழு பொறுப்பையும்  முதலில் யஹூதி, சியோனிச, ஷியாக்கள் மாத்திரம் அல்ல நமக்கு மத்தியில் இயங்கும் இஸ்லாமிய இயக்கங்களும்தான். ஏனென்றால்  யஹூதி , சியோனிசவாதிகள் முஸ்லிம்களின் ஒற்றுமையை இல்லாமல் செய்ய அவர்கள் தெரிவு செய்த வழிதான் ஷியா / சுன்னி பிரச்சினை, அதற்காக அவர்கள் பாவித்த ஆயுதமே நமது முஸ்லிம்கள்தான், உதவுவது போல் உதவி விட்டு முஸ்லிம்களை தீவரவதிகளாகவும் காண்பித்தார்கள், மேற்கத்திய ஊடகங்கள் இதில் முக்கிய பாத்திரம் வகித்தன.
 
அதாவது சோவியத் யூனியனை பல பிரிவுகளாக பிரித்த சந்தோஷத்தில் அமெரிக்காவும் மேற்கத்திய சில நாடுகளும் அவசரமாக கூடி இந்த சதியை தொடங்கி வைத்தார்கள், இதன் முதல் குறிக்கோள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைப்பது, ஏனென்றால் எதிர்காலத்தில் முழு உலகையே முஸ்லிம்கள் ஆட்சி செய்து விடுவார்களோ என்ற பீதி அவர்களிடத்தில் குடி கொண்டிருந்தது, அடுத்து ஷியாக்களை உற்றுநோக்குவோமானால் அவர்கள் தமது கொள்கையை பல நாடுகளிலுள்ள முஸ்லிம் பெயர் தாங்கிகளான ஊடவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் பரப்புகிறார்கள், அதற்காக அவர்களுக்கு ஊதியமும் , உதவியும் அளிக்கிறார்கள், இதற்க்கு நமது நாடும் விதி விலக்கல்ல, அந்த பணியை நம் நாட்டு ஷியா முகவர்கள் மிகவும் கச்சிதமாக முடிக்கிறார்கள் (இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இவைகளை பற்றி விரிவாக விளக்க எண்ணியுள்ளேன்),  
 
முதலில் எமக்கு மத்தியில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களை பற்றி சிறிது நோக்குவோம்..., இன்று நமது இலங்கை நாட்டில் எத்தனை இயக்கங்கள், ஜமாஹத்துக்கள் என்று எமக்கே தெரியாது,  ஒவ்வொரு இயக்கமும் "நாம் மட்டுமே நேரான வழியில் இருக்கிறோம்"  என்ற கொள்கையில் முஸ்லிம்களை பகுதி பகுதியாக பிரித்துவிட்டார்கள், இதில் என்ன வேடிக்கையென்றால் இவர்களில் பலருக்கு "பஜ்ர்" தொழுகை ஒன்று இருப்பதே நினைவில்லை (சுபஹு தொழுகைக்கு சென்று பார்த்தல் உண்மை புரியும்) தமது வாழ்க்கைக்கு ஏற்ற விதத்தில் மார்க்கத்தை மாற்றியமைக்க நினைப்பவர்கள் (அல்லாஹ் என்னையும் , அவர்களையும்  நேர்வழி படுத்துவானாக), ஒவ்வொரு இயக்கங்களும், ஜமாஹத்துக்களும் தமக்குத்தாமே ஒவ்வொரு மஸ்ஜிதுகளையும், தஹ்வா நிலையங்களையும் அமைத்து , தமது இயக்கத்துக்கு உரியவர்களுக்கு மாத்திரமே "அஸ்ஸலாமு அலைக்கும்" எனும்  இனிய சலாத்தை மட்டுப்படுதியுள்ளார்கள் என்பது மிகவும் வருந்ததக்க , மிகவும் கொடுமையான விடயம்.
 
 இதனால் நமது சமூகத்தின் ஒற்றுமை எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி அவர்களுக்கு ஒரு துளி கூட கவலை இல்லை என்பது வருந்தத்தக்கது, அல் குர்ஆன் சொல்கிறது "103:3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)" தஹ்வா பணி என்பது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் அதன் மூலம் சமூகத்தில் நிச்சயமாக ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், ஒரு முஸ்லிம் தவறான வழியில் இருப்பாரானால் (முதலில் தனக்காகவும், சகோதர முஸ்லிமுக்காகவும்) துஆ செய்ய வேண்டும், ஹிதாயத்தை கொடுக்ககூடியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் இல்லை, மார்க்க விடயங்களில் அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள் அதன் மூலம் ஷிர்க், பித்அத் மற்றும் மார்க்கத்தை பற்றிய தெளிவை ஏற்படுத்துங்கள், அதை விட்டுவிட்டு சிறு சிறு முரண்பாடுகளுக்காக "முஸ்லிம் உம்மாவின்" ஒற்றுமையை பிளவுபடுத்த முற்படவேண்டாம், இந்த பாரிய பொறுப்பை சரியான முறையில் நம் மத்தியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் (அரசியல்வாதிகளல்ல), மார்க்க அறிஞர்கள் மேற்கொள்ளவேண்டும்.
 
அதே நேரம் தம்மால் ஏதும் இந்த விடயத்தில் தவறு ஏற்பட்டு விடுமோ என்று இருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்று அதற்கான மாற்று வழிகளை கையாள வேண்டும் (தலைமைத்துவம் என்பது ஒரு அமானிதம் , அதற்காக நிச்சயமாக ஒவ்வோரு தலைவரும் பதில் சொல்லியாக வேண்டும்), அதே நேரம் தலைவர்களுக்கும், நல்ல மார்க்க அறிஞர்களுக்கும் கட்டுப்படவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நல்ல பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா தனது அருள் மறையில் இவ்வாறு கூறுகிறான் "4:59 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்" , இன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்,  பிறப்பால் முஸ்லிம்கள் என்று மார்தட்டும் எம்மை விட பல மடங்கு தீனுக்காகவும்,முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் சிறப்பாக செயற்படுகிறார்கள் "5:54 முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.

மனிதனுக்கு மனிதனே பொறமை கொள்ள வேண்டாம் எனும் புனித மார்க்கத்தை பின்பற்றும் நாம் இன்று இஸ்லாமிய இயக்கங்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டு நமக்கு மத்தியில் போட்டியும் பொறாமையுடனும் நடந்துகொள்வது மிகவும் வேதனை அழிக்கிறது,சமூக வளைத்தளங்களில் மிகவும் மோசமான முறையில் தர்க்கம் புரிகின்றோம், அல்லாஹ்வுக்காக இனிமேலாவது இதனை விட்டுவிடுவோம் "4:114 (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்" இதுவும் முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு சோதனையே ஆகவே "8:46 இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்" எனவே அல்லாஹ்வுக்கவும் , நமது எதிர்கால சந்ததியர்களுக்காகவும் நமக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக வாழ்ந்து அல்லாஹ்வுக்கும் அவனுடைய இஸ்லாத்துக்கும் எதிரானவர்களை தடுத்து நிறுத்த பாடு படுவோம், எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை தருவானாக! (5:16) “அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.

” - (இன்ஷா அல்லாஹ் அடுத்து,  சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளையும் / யார் இந்த ஷியாக்கள் என்பதை பற்றிய தரவுகளையும் தொடர்வதற்க்கு வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!)

1 comment:

  1. நல்ல விடயங்களை தொட்டுச்சென்றுள்ளீர்கள், அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக, முயற்சி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.